Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அட.. நம்ம யோகி பாபுவுக்கு கல்யாணமாமே.. யாரு பொண்ணு.. என்னைக்கு கல்யாணம்.. எங்க கல்யாணம்னு பாருங்க!
சென்னை: நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் முடிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார் நடிகர் யோகி பாபு.
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் 19 படங்களை கைவசம் வைத்திருக்கிறார் யோகி பாபு.
சரத்குமார் நடிக்கும் காட்சிகள் ஓவர்... வில்லேஜ் ஷெட்யூலுக்கு காத்திருக்கிறது சசிகுமாரின் நாநா டீம்!
அடிக்கடி தகவல்
முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்து விடுகிறது. ஆனால் யோகி பாபுவின் கால்ஷீட் கிடைக்க வில்லை என புலம்பி வருகின்றனர் இயக்குநர்கள். இந்நிலையில் நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே யோகி பாபுவுக்கு திருமணம் என அடிக்கடி தகவல் பரவி வருகிறது.
நடிகர் விளக்கம்
அண்மையில் கூட துணை நடிகை ஒருவருடன் யோகி பாபு இருக்கும் போட்டோ வைரலானது. மேலும் யோகி பாபுவுக்கு இவ்ளோ அழகான மனைவியா என்று கேட்டு அந்த போட்டோவை நெட்டிசன்கள் ட்ரென்ட்டாக்கினர். ஆனால் போட்டோவில் இருக்கும் பெண்ணுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று யோகி பாபு விளக்கம் அளித்திருந்தார்.
விரைவில் திருமணம்
சம்பந்தப்பட்ட அந்த துணை நடிகையும் ஒரு படத்தின் போது யோகி பாபுவுடன் தான் அந்த செல்பியை எடுத்ததாக கூறினார். இந்நிலையில் தர்பார் வெளியீட்டு விழாவின் போது தனக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார் என்றார். இந்நிலையில் நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பார்கவி
இதனை நடிகர் யோகி பாபுவும் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் இது என கூறியுள்ளார். மேலும் பெண்ணின் பெயர் பார்கவி என்றும் கூறியிருக்கிறார். பார்கவி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தான் என்று தனக்கும் குடும்பத்தினருக்கும் மிகவும் பெண்ணை பிடித்திருப்பதாகவும் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் திருமணம்
யோகி பாபு தீவிர முருக பக்தர் என்பதால் இவர்களின் திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளார். திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.