Yogi babu: சீக்கிரமா ஹாலிவுட் போங்க சார்.. அட்லிக்கு கொக்கி போட்ட யோகிபாபு!

சென்னை: நடிகர் ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாகவுள்ளது.

Actor Yogi babu hails director Atlee in Pre release function of Jawan movie

படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையிலும் இன்றைய தினம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அட்லியை புகழ்ந்து தள்ளிய யோகிபாபு: நடிகர் ஷாருக்கான் பாலிவுட் பாட்ஷாவாக பல ஆண்டு காலங்களாக பாலிவுட் ரசிகர்களை மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழிலும் ஷாருக்கானிற்கு அதிகமான ஃபேன் பேஸ் காணப்படுகிறது. அவரது நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான பதான் படமும் தமிழக ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் இயக்குநர் அட்லி கூட்டணியில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரும் 7ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் சூட்டிங் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் செப்டம்பருக்கு தள்ளிப் போனது. இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள இயக்குநர் அட்லி, தன்னுடன் நயன்தாரா, அனிருத் என கோலிவுட்டையே பாலிவுட்டிற்கு கடத்தியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி, யோகிபாபு, ப்ரியா மணி உள்ளிட்டவர்களையும் ஜவான் படத்தில் இணைத்துள்ளார்.

படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் அனிருத் இசையமைப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதேபோல படத்தின் அடுத்தடுத்த ப்ரமோக்களும் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. இந்நிலையில், இன்றைய தினம் சென்னையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் உள்ளிட்ட படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, ஷாருக்கான், பிரியா மணி, அட்லி மற்றும் யோகிபாபு என அனைவரும் மேடையேறி பேசி, ரசிகர்களை கவர்ந்தனர். மேடையில் பிரியா மணியுடன் இணைந்து ஷாருக்கான் ஆடிய ஆட்டமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் அனிருத், ஷாருக்கானின் எஸ் ஆர் கே வார்த்தைகளை மேஜிக்காக ரசிகர்களுடன் சேர்ந்து கர்ஜிக்க வைத்தார். இந்தப் படத்தில் அட்லி உள்ளிட்ட அதிகமான கலைஞர்கள் கோலிவுட்டிலிருந்து இணைந்துள்ள நிலையில் படத்திற்கான தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Actor Yogi babu hails director Atlee in Pre release function of Jawan movie

இந்நிலையில் இந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய யோகிபாபு, தமிழில் தன்னுடைய ஆளுமையை நிரூபித்த இயக்குநர் அட்லி தற்போது பாலிவுட்டிலும் நிரூபித்துள்ளதாகவும் விரைவில் அவர் ஹாலிவுட்டிலும் கலக்குவார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய நிகழ்ச்சியின் ஆங்கர் பாவனா, யோகிபாபுவின் ஹாலிவுட் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யோகிபாபு, இரும்மா இப்பத்தானே அட்லிக்கு பிட் போட்டிருக்கிறேன், அவர் ஹாலிவுட் போனால் தன்னையும் அழைத்துக் கொள்வார் என்று குறிப்பிட்டார்.

அங்கே அர்னால்டே நடித்தாலும் சுற்றிலும் நம்முடைய கலைஞர்களை களமிறக்கி அட்லி விளையாடுவார் என்றும் யோகிபாபு தெரிவித்தார். மேலும் விடிவி கணேசன் போன்றவர்களையும் அந்தப் படத்தில் நடிக்கவிட்டு, அர்னால்டை டார்ச்சர் செய்வார் அட்லி என்றும் யோகிபாபு நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அவரின் இந்தப் பேச்சுக்கள் அனைத்தையும் மிகவும் உற்சாகமாக அட்லி கைத்தட்டி ஆரவாரத்துடன் ரசித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X