என் சீட்டை தொட்டு கும்பிட்டு மூன்று முறை சுற்றி வருவாரு.. விஜய் சேதுபதி குறித்து யோகிபாபு ஓபன்!

சென்னை: நடிகர் வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி, விஜய்யின் புலி உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக யோகிபாபு லீட் கேரக்டரில் நடித்துள்ள போட் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப்படத்தின் ட்ரெயிலர், சிங்கிள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் எம்எஸ் பாஸ்கர், கௌரி கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

Vijay Sethupathi Yogi babu

நடிகர் யோகிபாபு: நடிகர் யோகிபாபு காமெடியனாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் ஹீரோவாகவும் காமெடிப் படங்களில் மட்டுமில்லாமல் அழுத்தமான கதைக்களங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில் அடுத்ததாக யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள போட் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ளார். முன்னதாக வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி, விஜய்யின் புலி உள்ளிட்ட படங்களை இவர் கொடுத்துள்ளார்.

போட் படம்: போட் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ளநிலையில் படத்தின் ட்ரெயிலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் படத்திற்கான பிரமோஷன்களில் யோகிபாபு, சிம்புதேவன் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே படத்தை பார்த்த பிரபல ஒளிப்பதிவாளரான பிசி ஸ்ரீராம் இந்தப் படம் இந்திய சினிமாவில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என்றும் மிக அழகான அனுபவம் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பீரியட் படம்: 5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். கடந்த 1940களின் பிண்ணனியில் படம் உருவாகியுள்ளது. சென்னைமீது ஜப்பான் குண்டு வீசியபோது உயிருக்கு பயந்து படகில் தப்பிக்க முயலும் 10 பேரை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் சிம்பு. இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் யோகிபாபு. அவர் ஆன்மீகத்தில் அதிகமாக செயல்பட்டு வருவது குறித்து பேசியுள்ளார். தான் சிறுவயதில் இருந்தே ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி குறித்து யோகிபாபு: இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய காரில் தான் அமரும் சீட்டை தொட்டு கும்பிட்டு தன்னுடைய காரை மூன்று முறை வலம்வருவார் என்று யோகிபாபு தெரிவித்துள்ளார். தன்னுடைய கார் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டாலே ஆறுபடையும் வந்துவிட்டதாக விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூறுவார்கள் என்றும் யோகிபாபு கூறியுள்ளார். கண்ணுக்கு தெரியாத ஜாதிக்கு பின்னால் ஓடுவதை காட்டிலும் கண்ணுக்குத் தெரியாத சாமி பின்னால் ஓடினால் நல்லதுதான் நடக்கும் என்றும் யோகிபாபு இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X