Yogi babu: அதுக்கெல்லாம் நான் செட் ஆக மாட்டேன்.. ரசிகர்கள் ஓரங்கட்டிடுவாங்க.. யோகிபாபு ஓபன்!

சென்னை: நடிகர் யோகி பாபு, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள போட் படத்தை இயக்கியுள்ளார் சிம்பு தேவன். முன்னதாக சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், புலி உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு தேவனின் போட் படம் நாளைய தினம் ரிலீசாக உள்ளது.

இந்த படத்திற்கான பிரமோஷன்களில் அடுத்தடுத்து சிம்பு தேவன், யோகி பாபு உள்ளிட்ட படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பீரியட் படமாக சுதந்திர போராட்ட காலத்தையொட்டி உருவாகியுள்ள போட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

Yogi babu Boat movie Simbudevan

போட் படம்: நடிகர் யோகி பாபு. சின்னி ஜெயந்த். கௌரி கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள போட் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குனர் சிம்பு தேவனும் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு, சின்னி ஜெயந்த் மற்றும் கௌரி கிஷன் ஆகியோர் படம் குறித்தும் மற்றும் பல விஷயங்கள் குறித்தும் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்ட உரையாடல் தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மாணவர்களுடன் கலந்துரையாடல்: இந்த கலந்துரையாடலில் மாணவர்கள் அடுத்தடுத்த கேள்விகளை கேட்ட நிலையில் யோகிபாபு, சின்னி ஜெயந்த் மற்றும் கௌரி கிஷன் மூவரும் மிகச் சிறப்பான பதில்களை கொடுத்ததை பார்க்க முடிந்தது. அவர்கள் இயல்பாக அடுத்தடுத்து பேசிய விஷயங்கள் மாணவர்களையும் கவர்ந்திருந்தது., தான் பத்தாவது பெயில் ஆகிவிட்டதாகவும் அதனால் கல்லூரிக்கு சென்றதில்லை என்றும் வெளிப்படையாக பேசிய யோகி பாபு, கல்லூரிக்கு வந்தது தனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதனிடையே படங்களில் அதிகமாக கல்லூரி மாணவராக நடித்துள்ள சின்னி ஜெயந்த், தான் கல்லூரியில் படித்திருந்தாலும் எப்போதும் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட் ஆகவே இருந்ததாக கூறியுள்ளார்.

அதுக்கெல்லாம் செட் ஆகமாட்டேன்: அதாவது வகுப்பிற்கு வெளியில் சுற்றித்திரியும் ஸ்டுடென்ட்டாகவே இருந்ததாகவும் எப்போதும் தான் கல்லூரியின் கேன்டீனிலேயே இருப்பேன் என்றும் கூறியிருந்தார். இதனிடையே யோகி பாபு அடுத்தடுத்து வித்தியாசமான கேரக்டரில் நடித்து வரும் சூழலில் வில்லனாக நடிப்பாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த யோகி பாபு, தான் காமெடியனாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் தொடர்ந்து நடித்துவரும் நிலையில் தான் வில்லனாக நடிக்க செட்டாக மாட்டேன் என்று கூறியுள்ளார். அவ்வாறு நடித்தால் தன்னை ரசிகர்கள் ஓரங்கட்டி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள்: தானெல்லாம் மண்டேலா, கோமாளி, கோலமாவு கோகிலா போன்ற கதைக்களத்திற்குதான் செட் ஆவேன என்றும் போட் படத்திலும் சிம்புதேவன் சில காட்சிகளை வைத்திருந்ததாகவும், சார் இதெல்லாம் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்று தான் எடுத்து சொன்னதும் அந்தக் காட்சிகளை படத்திலிருந்து அவர் நீக்கிவிட்டதாகவும் யோகிபாபு மேலும் கூறியுள்ளார். இதனிடையே இந்த படத்தில் சீனியர் ஆக்டர்களுடன் நடித்தது குறித்து கௌரி கிஷன் தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்ததையும் இந்த உரையாடலில் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X