Yogi babu: எனக்கும் சூரிக்கும் போட்டியா.. யோகிபாபு சொன்ன விஷயம்!
சென்னை: யோகி பாபு காமெடியனாகவும் ஹீரோவாகவும் அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான மண்டேலா, பொம்மை நாயகி படங்கள் ஹீரோவாக மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இதே போல ரஜினி. விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி டிராக்கில் பயணிக்கவும் யோகி பாபு தயக்கம் காட்டவில்லை.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி யோகிபாபு -சிம்புதேவன் காம்பினேஷனில் உருவாகியுள்ள போட் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பங்கேற்று வரும் யோகி பாபு, தன்னுடைய படம் மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரசியமான விஷயங்களையும் பேசி வருகிறார்.

நடிகர் யோகிபாபு: யோகிபாபு நாயகனாக நடித்திருந்த மண்டேலா, பொம்மை நாயகி உள்ளிட்ட படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளன. காமெடியனாகவும் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் யோகிபாபு. இந்நிலையில் அடுத்ததாக சிம்பு தேவன் இயக்கத்தில் போட் படத்தில் நடித்து முடித்துள்ளார் யோகி பாபு. இந்த படத்தில் அவருடன் கௌரி கிஷன், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலகட்டத்தை ஒட்டிய இந்த படத்தில் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக சிம்பு தேவன் முன்னதாக தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
போட் படம்: சிம்புதேவன் மட்டுமில்லாமல் யோகி பாபு கௌரி கிஷன் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன்கள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடததப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் தாமதமாக வந்து சர்ச்சையில் சிக்கினார் யோகிபாபு. தொடர்ந்து அனைவர் முன்னிலையில் தன்னுடைய தாமதத்திற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
போட் பட பிரமோஷன்கள்: போட் படத்திற்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வரும் யோகி பாபு, சூரி குறித்தும் அவரது அசுர வளர்ச்சி குறித்தும் தனது பேட்டியில் பேசியுள்ளார். தாங்கள் நடிக்க வந்த துவக்க காலத்திலேயே நண்பர்களாக பழகியதாகவும் தன்னுடைய மண்டேலா படம் பார்த்து சூரி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்ததாகவும் அதே போல விடுதலை மற்றும் கருடன் படங்களில் சூரியின் நடிப்பை பார்த்து தான் மிரண்டதாகவும் இதை தான் அவரிடம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் யோகி பாபு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சூரிக்கும் எனக்கும் போட்டியா?: இந்நிலையில் தனக்கும் சூரிக்கும் போட்டியா என்ற கேள்விக்கு பதிலளித்த யோகி பாபு அப்படியெல்லாம் இல்லை என்றும் தாங்கள் தங்களது வளர்ச்சியை ஆரோக்கியமாக பார்ப்பதாகவும் யோகி பாபு தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டு முன்னேறிய தாங்கள், மற்றவர்களின் வளர்ச்சியை சிறப்பான கண்ணோட்டத்துடனேயே பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கும் சூரிக்கும் போட்டி என்பது டீக்கடையில் நேரத்தை போக்குவதற்காக பேசப்படும் பேச்சு என்றும் தான் சூரிக்காக கோயிலில் அர்ச்சனை செய்ததாகவும் யோகிபாபு சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











