Yogi babu: விஜய் சாரை கூட்டிட்டுப்போய் சீட்டிங் பண்ணேன்.. உண்மையை ஒப்புக்கொண்ட யோகிபாபு!

சென்னை: நடிகர் யோகிபாபு 20 ஆண்டுகளை கடந்து 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் யோகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள யோகி பாபு, தொடர்ந்து காமெடியனாகவும் ஹீரோவாகவும் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள போட் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ள சூழலில் முன்னதாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Varisu movie Yogi babu

நடிகர் யோகிபாபு: நடிகர் யோகி பாபு யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். முன்னதாக விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சிமூலம் மீடியாவில் தன்னுடைய என்ட்ரியை செய்திருந்த யோகி பாபு, இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை சென்றடைந்தார். இதன்மூலமே படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். 20 ஆண்டுகளை கடந்த தனது பயணத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள யோகிபாபு, தற்போதும் பிசியான நடிகராக தன்னை கோலிவுட்டில் நிலைநிறுத்தியுள்ளார். காமெடியுடன் கேரக்டர் ரோல்களிலும் பிரகாசித்து வருகிறார்.

போட் படம்: மண்டேலா, பொம்மை நாயகி போன்ற அழுத்தமான கதைக்களங்களில் நடித்து பெயர் பெற்றுள்ள யோகி பாபு, ரஜினிகாந்த், விஜய், அஜித் என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சிம்புதேவன் இயக்கத்தில் போட் படம் யோகி பாபு நடிப்பில் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தை மையமாக கொண்டு பீரியட் படமாக உருவாகியுள்ளது. படத்தின் அதிகபட்சமாக காட்சிகள் கடலில் எடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக படத்தின் ட்ரெயிலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து, படத்திற்காக ஆவலை தூண்டியுள்ளது.

போட் பட பிரமோஷன்கள்: இந்தப் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் யோகி பாபு ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சின்னிஜெயந்த், கௌரி கிஷனுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுடன் பேசிய யோகி பாபு, விஜய்யுடன் ஆடிய கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார். வாரிசு படத்தின் சூட்டிங்கின் இடையில் விஜய் உள்ளிட்டவர்களை அழைத்து சென்று தான்தான் கிரிக்கெட் விளையாடியதாகவும் விஜய்யிடம் சீட்டிங் செய்ய முயன்றதாகவும் யோகி பாபு கூறியுள்ளார். விஜய் டீம், சிக்ஸர் அடித்த நிலையில், அதை ஃபோர் என்று கூறி தான் போங்காட்டம் ஆடியதாகவும், ஆனால் விஜய் இதுகுறித்து சண்டையிட்டு, சிக்ஸராக மாற்றியதாகவும் யோகி பாபு கூறியுள்ளார்.

விஜய்யுடன் விளையாடிய கிரிக்கெட்: அதன்போது மூன்று மேட்ச் விளையாடியதாகவும் விஜய் கீழே விழுந்தெல்லாம் ஃபீல்டிங் செய்ததாகவும் யோகி பாபு கூறியுள்ளார். தனக்கு கிரிக்கெட், ஃபுட்பால் இரண்டுமே விருப்பத்திற்குரியதாக உள்ளதாகவும் இரண்டையுமே ஓய்வு நேரத்தில் தான் விளையாடி வருவதாகவும் யோகி பாபு மேலும் கூறியுள்ளார். இதனிடையே மாணவர்களின் அடுத்த கேள்விக்கு பதிலளித்த யோகி பாபு, லொள்ளு சபா காலத்தில் உள்ளது போனற் அதே மனநிலையுடன்தான் தான் தற்போதும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X