கிரிக்கெட் விளையாடி பந்தை பறக்கவிடும் யோகிபாபு… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சென்னை : சிரித்து சிரித்து வயிறு வலிக்க வேண்டுமா யோகி பாபு படம் பார்த்தால் போதும் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது.

நகைக்சுவை நடிகராக அறிமுகமான யோகி பாபு தற்போது ஹீரோ, குணசித்திரம், நகைச்சுவை என கலக்கி கொண்டு இருக்கிறார்.

யோகி பாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடமலையான்

வடமலையான்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமான கர்ணன் திரைப்படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருந்தார். இந்த படத்தில் வடமலையான் என்ற கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது.

விஜயையுடன் 4வது படம்

விஜயையுடன் 4வது படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் தளபதி 65 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் யோகி பாபு உறுதிப்படுத்தினார். மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களில் விஜய்யுடன் யோகி பாபு நடித்துள்ளார்.

தீபாவளிக்கு

தீபாவளிக்கு

அதேபோல ஹெச் வினோத் இயக்கி வரும் வலிமை திரைப்படத்திலும் யோகி பாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று குறைந்தவுடன் படப்பிடிப்பை தொடங்க வலிமை படக்குழு தயாராக உள்ளது.

ஏராளமான படங்கள்

ஏராளமான படங்கள்

பூச்சாண்டி, சலூன், டாக்டர், வலிமை, தளபதி 65,அயலான், வெள்ளை உலகம், டக்கர் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், டாக்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கொரோனாவால் பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாடும் வீடியோ

கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதை கழித்து வரும் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. நிற்கக்கூட நேரம் இல்லாமல் இருந்த யோகி பாபுவுக்கு தற்போது விளையாட நேரம் கிடைத்துள்ளதால் , மனுஷன் புகுந்து விளையாடி பந்தை அடிச்சி தெறிக்க விடுறாரு. இணையத்தில் இந்தவீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X