கவலைப்படாதீங்க எனக்கும் அது வராது.. யோகிபாபுவிடம் தோனி சொன்ன விஷயம் என்ன தெரியுமா?
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டார். இப்போது ஹீரோவாகவும் கலக்கிவருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் யோகிபாபு. அவரது கவுண்ட்டர்களும், டைமிங் சென்ஸும் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைப்பவை.லொள்ளு சபாவின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு பெரிய திரைக்கு வந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த யோகிபாபு இப்போது இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நகைச்சுவை செய்துவிட்டார்.
ஹீரோ: காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடியாகவும் கலக்கும் யோகி: அதனை தொடர்ந்து அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் அவர் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மாவீரன் படத்தில் யோகிபாபுவின் டைமிங்கும் கவுண்ட்டர்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. அதேபோல் ஜெயிலர் படத்திலும் நல்ல விதமாகவே காமெடி செய்திருந்தார்.

பிற மொழிகளிலும் படுபிஸி: தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார் யோகிபாபு. அந்தவகையில் மலையாளத்தில் அவர் கடைசியாக குருவாயூர் அம்பல நடையில் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் ஹிந்தியிலும் தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படும் யோகிபாபு; தமிழில் டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி, லெக் பீஸ், சுமோ, ஏஸ் என ஏகப்பட்ட படங்கள் வந்தன.
தோனியுடன் கூட்டணி: இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தமிழில் LGM என்ற படத்தை தயாரித்தார். அதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க; யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தப் படத்திலிருந்து அவருக்கும், தோனிக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தோனி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
என்ன பேசினார்?: அவர் பேசுகையில், " LGM படத்தின்போதுதான் முதன்முறையாக நான் தோனியை சந்தித்தேன். அந்தப் படத்தின் விழாவில் தோனிக்கு அருகில் ஒரு சீட் காலியாக இருந்தது. தோனிக்கு அருகில் சாக்ஷி, அடுத்து நான் அமர்ந்திருந்தேன். தோனி அமைதியாகத்தான் இருந்தா. அந்த சமயத்தில் சாக்ஷி என்னை அழைத்து, 'உங்களை தோனி அவருக்கு அருகில் இருக்கும் காலி இருக்கையில் அமர சொல்கிறார்' என்றார். உடனே நானும் அவருக்கு அருகே அமர்ந்தேன். அப்போது அவரிடம் பேச ஆரம்பிக்கையில், 'சாரி சார் எனக்கு ஆங்கிலம் வராது என்று கூறினேன். உடனே அவரோ, எனக்கும் ஒழுங்காக வராதுதான். அதற்காக கவலைப்பட வேண்டாம். நீங்களும், நானும் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறோம். அதுதான் வேண்டும்' என்றார். மிக அற்புதமான மனிதர் அவர்" என்றார்.


Click it and Unblock the Notifications











