பிஸ்மி கொளுத்திப் போட்ட பிரச்னை.. கூலாக கையாளுகின்றாரா யோகி பாபு? என்ன செய்திருக்காருனு பாருங்க!
சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்திலேயே தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, நடிகர் யோபு பாபு படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தின் கைகளைத் தொட்டதாகவும், உடனே அஜித் டோன்ட் டச் மி எனக் கூறியதாகவும் வலை பேச்சு பிஸ்மி கூறியதுதான். மேலும் இந்தத் தகவலை எங்களிடம் மிகவும் வருதப்பட்டு, யோகி பாபு தான் எங்களிடம் கூறினார். நாங்கள்தான் ஊடக தர்மத்தின் அடிப்படையில், அஜித் குமாரின் பெயரை மறைத்துவிட்டு, யோகி பாபுதான் கூறினார் என்பதையும் மறைத்துவிட்டு, கூறினோம் எனக் கூறினார். இந்த விஷயம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அஜித் உண்மையாலுமே இப்படி நடந்து கொண்டாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். இணையவாசிகளோ அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர்களுக்கு கை கொடுப்பது, அவர்களை கட்டிப்பிடிப்பது போன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் யோகி பாபு அஜித் உடன் வேதாளம் மற்றும் வீரம் ஆகிய படங்களில் நடித்தார்.

இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும்போதே, பல பேட்டிகளில் அஜித் குறித்து யோகி பாபு பேசிய வீடியோக்களும் இணையத்தில் வேகமாக உலா வருகின்றது. குறிப்பாக, வீரம் படத்தில் நடித்த அனுபவத்தை கூறினார். மேலும், வீரம் படத்தின் அறிமுக காட்சியில் நடித்தப் பின்னர், அஜித் தனக்கு கை கொடுத்து, கட்டிப்பிடித்தார். அப்போது எனது உடலில் மின்சாரம் பாய்வதுபோல இருந்தது எனக் குறிப்பிட்டார்.

அஜித் அட்வைஸ்: மற்றொரு பேட்டியில், நடிகர் அஜித் தனக்கு அறிவுரை வழங்கியதாக யோகி பாபு கூறுகின்றார். அதில், யோகி நமக்கு மிக மிக முக்கியமானதே முகமும் உடலும்தான். எனவே இதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு உட்ச நடத்திரம் இவ்வாறு என்னிடம் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அஜித் குறித்து பேசினார்.

ஃபோட்டோ: நடிகர் அஜித் குறித்து யோகி பாபு பல இடங்களில் இவ்வாறு பேசியுள்ளபோது, பிஸ்மி ஏன் இவ்வாறு பேசுகின்றார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வேதாளம் படத்தின் படப்பிடிப்பின்போது மொட்டை ராஜேந்திரன் உடன் தான் அமர்ந்துள்ளதை அஜித்குமார் தனது கேமராவில் ஃபோட்டோ எடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் புகைபடத்தில், எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம். மைடியர் தல, அஜித்குமார் சார் எனக் குறிப்பிட்டுள்ளார். யோகி பாபு குறித்து பிஸ்மி இவ்வாறு கூறியுள்ள நேரத்தில் யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











