Yogi babu: பிரமோஷனுக்கு ரெடி.. லக்கி மேன் பட ப்ரமோவில் யோகி பாபு கலகலப்பு!

சென்னை: மண்டேலா, கூர்க்கா, பொம்மை நாயகி படங்களை தொடர்ந்து அடுத்ததாக யோகிபாபு ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் லக்கி மேன்.

நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

Actor Yogi babus Lucky man movie promo makes everyone laughing

இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த ப்ரமோக்களை வெளியிட்டு வருகிறது படக்குழு.

லக்கி மேன் படத்தில் நாயகனாக களமிறங்கும் யோகி பாபு: நடிகர் யோகிபாபு, முன்னணி காமெடி நடிகராக தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். ரஜினி, விஜய் என அடுத்தடுத்த ஸ்டார்களுடன் இவர் நடித்துவரும் படங்கள் மற்றும் அதன் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் ரஜினியுடன் இணைந்து இவர் நடித்திருந்த ஜெயிலர் படமும் வெளியாகி இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத்தந்தது. முன்னதாக சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். அடுத்தடுத்த இவரது வெற்றிப் படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது.

காமெடியனாக கலக்கல் பர்பார்மென்சை கொடுத்துவருகிறார் யோகிபாபு. இவரது டைமிங் காமெடி மற்றும் பாடி லேங்க்வேஜ் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன. இதனிடையே ஹீரோவாகவும் இவர் சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அடுத்தடுத்து ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் மண்டேலா, கூர்க்கா, பொம்மை நாயகி படங்களை தொடர்ந்து அடுத்ததாக யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள லக்கி மேன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் செப்டம்பர் 1ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

படத்தின் ட்ரெயிலர், டீசர், போஸ்டர்கள் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்று வகின்றன. குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. படத்தில் ராஜரத்தினம் நடித்து கவனத்தை பெற்ற வீரா போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். யோகிபாபுவின் மனைவியாக ரேச்சல் ரேபெக்கா நடித்துள்ளார். இவர் முன்னதாக கடைசி விவசாயி, குட்நைட் போன்ற படங்களில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சதுரங்க வேட்டை, ஜெய்பீம் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள சீன் ரோல்டன் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக சிறப்பான இசையை வழங்கியுள்ளார். படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று தேடும் ஒரு மனிதனின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. முன்னதாக வெளியான பொம்மை நாயகி படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்த யோகிபாபு, இந்தப் படத்தில் காமெடியையே கதைக்களமாக கொண்டு களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் படத்தின் புதிய ப்ரமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் யோகிபாபுவிடம் சென்று லக்கி மேன் படத்தின் பிரமோஷன் குறித்து பேசுவதாக இந்த வீடியோவில் அமைந்துள்ளது. யோகிபாபு பிரமோஷன் செய்து யாருமே பார்த்ததில்லை என்று அவர் கமெண்ட் செய்யும் நிலையில், ப்ரமோஷனுக்கு வருவதாக கூறும் யோகிபாபு, இவரை எப்படி ஆஃப் செய்யலாம் என்று யோசிப்பதாக வீடியோவில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X