வெயில்ல ரொம்ப கஷ்டப்படுறாங்க.. டிராபிக் போலீஸுக்கு எனர்ஜி டிரிங்ஸ் வழங்கிய பிரபல நடிகர்!
சென்னை: உயிரை பணயம் வைத்து இரவு பகலாக வேலைப்பாத்து வரும் போலீசாருக்கு எனர்ஜி டிரிங்ஸ்களையும் மாஸ்க்குகளையும் வழங்கியிருக்கிறார் பிரபல நடிகர்.
மனித குளத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது கொரோனா வைரஸ். இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பலவும் திணறி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் மருத்துவர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நடிகர் நடிகைகள் என திரைத்துறை சம்பந்தப்பட்ட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு, கொளுத்தும் வெயிலில் மக்களின் பாதுகாப்புக்காக உழைக்கும் போக்குவரத்து போலீசாருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு என்95 மாஸ்க் மற்றும் எனெர்ஜி டிரிங்ஸ்களை வாங்கி கொடுத்துள்ளார்.
Recommended Video
நடிகர் யோகி பாபு இதற்கு முன்பு வருமானம் இன்றி கஷ்டப்படும் சினிமாத் தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











