Actor Yogibabu: செவ்வாய் பரிகார தலத்தில் யோகிபாபு சாமி தரிசனம்.. மனமுருகி பிரார்த்தனை!
சென்னை: நடிகர் யோகிபாபு தமிழில் விஜய், ரஜினிகாந்த், சூர்யா அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் அடுத்தடுத்த படங்களில் சரியான இடைவெளிகளில் இவர் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொம்மை நாயகி படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
மிகுந்த சாமி நம்பிக்கை கொண்டவர் யோகி பாபு. தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இவர் அடுத்தடுத்த முருகரின் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் இவர் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நடிகர் யோகி பாபு: காமெடி நடிகராக தன்னுடைய கேரியரை துவங்கினாலும் தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருபவர் யோகிபாபு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான பொம்மை நாயகி படம் ரசிகர்களை உருக வைத்தது. ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் ஷாருக்கான், டோலிவுட்டில் பிரபாசுடனும் நடித்துள்ளார். ஹீரோவாகவே நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் தொடர்ந்து இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார் யோகி பாபு.
அதிகமான படங்கள்: கைவசம் டஜனுக்கும் அதிகமான படங்களை வைத்துள்ள யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள சட்னி சம்பார் என்ற வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் வாணி போஜன், நிதின் சத்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த தொடரை வேல்ஸ் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து தயாரித்துள்ளது.
வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம்: முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துவரும் யோகிபாபு மிகுந்த சாமி நம்பிக்கை கொண்டவர். இவரது எக்ஸ் தள பக்கத்தில் அடுத்தடுத்து முருகர் படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் செவ்வாய் பரிகார திருத்தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் இன்றைய தினம் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமியை யோகிபாபு தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்தார். கோயிலில்ல் அவருக்கு சகல மரியாதையும் கொடுக்கப்பட்ட நிலையில் இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கலந்துள்ளது.
பிசியான யோகிபாபு: நிற்ககூட நேரமில்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் யோகிபாபு. முன்னணி நடிகர்கள் மட்டுமில்லாமல், புதிய ஹீரோக்களுடனும் இவர் இணைந்து நடித்து வருகிறார். இவரது தலைமுடி இவருக்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது. தன்னுடைய டைமிங் காமெடி மட்டுமில்லாமல் பாடி லேங்குவேஜிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











