Yugendran: 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல வில்லன்.. கலக்கல் காம்போ!

சென்னை: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சிநேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் திரிஷா பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது துபாயில் நடந்து வருவதாகவும் இன்னும் இரு வாரங்களில் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விஜய்யுடன் இந்த படத்தில் முன்னணி வில்லன் நடிகர் ஒருவர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Actor Yugendran joined Vijay s The greatest of all time movie after 18 years

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. முன்னதாக சென்னையில் விஜய் -திரிஷா காம்பினேஷனில் பாடல் காட்சியின் எஞ்சிய சூட்டிங் மற்றும் சில பேட்ச் ஒர்க் வேலைகள் நடந்தன. இன்னும் இரு வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு சாய்பாபா கோயிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

வில்லனாக இணைந்த யுகேந்திரன்: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் கோட் படத்தில் நடிகர் யுகேந்திரன் இணைந்துள்ளதாக வீடியோ மூலம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். முன்னதாக விஜய்யுடன் பகவதி, மதுர, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் யுகேந்திரன் நடித்துள்ளார்.

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணி: இந்நிலையில் தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் கோட் படம் மூலம் இணைந்துள்ளது. விஜய் மற்றும் வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகிவரும் இந்த படத்தில் இணைய வேண்டும் என்று நினைத்ததாகவும் அது நிறைவேறியுள்ளதாகவும் யுகேந்திரன் தன்னுடைய உற்சாகத்தை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். கோட் படத்தில் தான் வில்லனாக நடித்துள்ளதாகவும் விஜய்யுடன் தன்னுடைய காம்பினேஷன் காட்சிகள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டதாகவும் யுகேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

2வது சிங்கிள்: நடிகர் மோகனும் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள சூழலில் தற்போது யுகேந்திரனும் ஒரு வில்லன் என்பது ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 18 ஆண்டுகளுக்கு பின்பு விஜய் மற்றும் யுகேந்திரன் காம்பினேஷன் என்ன மாதிரியான மேஜிக்கை ஏற்படுத்தும் என்று அறியவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் செப்டம்பர் 5ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள சூழலில் அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் 2வது சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X