Actor Yugendran: விஜய்யுடன் தளபதி 68ல் இணைந்த பிரபல பாடகர்.. 18 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி!
சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படத்தின் அடுத்தக்கட்ட ஷெட்யூலை துருக்கியில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் இந்த சூட்டிங் துவங்கவுள்ளது.
படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவரும் நிலையில், டைம் டிராவலை மையமாக கொண்டு படத்தின் கதைக்களம் உருவாகி வருகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் லியோ படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்தாலும் விமர்சனங்கள் கலவையாகவே கிடைத்தன.
தளபதி 68: இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணைந்துள்ளார். தளபதி 68 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கப்பட்டு பாடல் காட்சி மற்றும் சில ஆக்ஷன் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்தக்கட்டமாக படக்குழுவினர் துருக்கியில் சூட்டிங்கை துவங்கவுள்ளனர். இதற்காக இன்னும் சில தினங்களில் தளபதி 68 டீம் துருக்கி செல்லவுள்ளது.
வில்லனான நடிகர் மோகன்: இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி இணைந்துள்ளார். மேலும் சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் கமிட்டாகியுள்ளனர். சென்னையில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் இணைந்து ஆட்டம் போட்டனர். படத்தில் 90களின் மாஸ் ஹீரோ மோகன், வில்லனாகியுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
விஜய்யுடன் இணைந்த யுகேந்திரன்: அதிகமான நட்சத்திரப்பட்டாளங்கள் இணைந்துள்ள தளபதி 68 படத்தில் தற்போது புதிய வரவாக நடிகர் மற்றும் பாடகர் யுகேந்திரன் இணைந்துள்ளார். படத்தில் அவருக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2005ம் ஆண்டில் திருப்பாச்சி என்ற படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருந்த நிலையில் தற்போது 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 5வது படம் இது.

பிக்பாஸ் புகழ் யுகேந்திரன்: தற்போது நடைபெற்றுவரும் விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக இணைந்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார் யுகேந்திரன். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் யுகேந்திரன். தற்போது விஜய்யுடன் இவர் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











