கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் யூகி சேது

சென்னை: நடிகர் யூகி சேது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக கணேஷ் வெங்கட்ராம் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான படப்பிடிப்பிற்காக லண்டனுக்கு பறந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.

நக்கலும் நையாண்டியும் ஒருங்கே இணைந்த ஒரு மேதாவி நம் யூகி சேது. சுமார் 27 வருட இடைவெளிக்கு பிறகு தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். இயக்குனராக அவர் திரையுலகில் அறிமுகமான முதல் படம் 1987ஆம் ஆண்டில் நாசர், அமலா நடிப்பில் வெளியான கவிதை பாட நேரமில்லை.

Actor Yugi Sethu Directs new Film starring Ganesh Venkatraman

இது அங்குஷ் எனும் இந்தி படத்தின் ரீமேக் படமாகும். இரண்டாவது படம் மாதங்கள் ஏழு. இவர் இயக்கிய இந்த இரு படங்களும் சரியாக ஓடவில்லை என்பதால் அவர் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டாமல் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

அவர் பஞ்சதந்திரம் மற்றும் ரமணா படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பஞ்சதந்திரம் படத்தில் கமல்ஹாசனின் நண்பர்களுள் ஒருவராக வந்து தூள் கிளப்பினார். ரமணா படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார்.

இன்னும் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்த இரண்டு கதாபாத்திரத்திலும் அவரது எதார்த்தமான நடிப்பு அபாரம். பிறகு தல அஜித் குமார் நடித்த வில்லன் மற்றும் அசல் திரைப்படங்களுக்கு, திரைக்கதை எழுதி தன்னுடைய எழுத்து திறமையையும் வெளிப்படுத்தினர் யூகி சேது.

இந்த இரு படங்களும் வெளியாகி இதுவரையில் 15 வருடங்கள் உருண்டோடி விட்டன. தற்போது அவருடனான நேர்காணலின் போது அவரிடம் திரும்பவும் எப்போது அவர் திரையில் தோன்றுவார் என கேட்டதற்கு, மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் அவர் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக கணேஷ் வெங்கட்ராம் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான படப்பிடிப்பிற்காக லண்டனுக்கு பறந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.

இப்படத்தில் நடிப்பதை பற்றி கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில் தனக்கு மிகவும் பிடித்த ஒரு சிறப்பான திறமைசாலியுடன் பணியாற்றுவதை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவருடைய எழுத்து, காமெடிகளின் ரசிகன் நான். அவருடன் பணியாற்றுவதன் மூலம் நான் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்ளலாம் என்று பெருமிதத்துடன் கூறினார்.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு வெற்றியை கொடுக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X