»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் - நடிகைகள் சம்பளத்தை குறைப்பது என திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்தமுடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனை தற்போது தீர்ந்து சமரசம் ஏற்பட்டுள்ளது.

திரைப்படங்கள் தயாரிக்க செலவு அதிகமாவதால் அதைக் கட்டுப்படுத்த நடிகர் -நடிகைகளின் சம்பளத்தை குறைப்பது என தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தனர். இதைபல நடிகர் - நடிகைகளும் எதிர்த்து வந்ததால் திரையுலகில் பிரச்சனை உருவானது.

இந்த நிலையில், படத் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் தனது 50-வது பிறந்த நாள்விழாவுக்கு திரையுலகில் தனக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கு அழைப்புவிடுத்திருந்தார்.

இந்த விருந்தில் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், பிரபு, கார்த்திக், முரளி உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர்,பிரமிட் நடராஜன், சத்யஜோதி தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

விருந்தின் போது நடிகர் சங்கத்தினருக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும்இடைேயே பேச்சு வார்த்தை நடந்தது. அதன் பின் சமரசம் ஏற்பட்டது.

இதன்படி, நடிகர் -நடிகைகளுக்கான சம்பளத்தில் 10 சதவிகிதம் முன் பணமாககொடுக்கப்படும். டப்பிங்கின் போது 40 சதவிகிதமும், திரைப்படம் வெளியாகும்போது மீதிப் பணத்தையும் கொடுப்பதாக தயாரிப்பாளர்கள் கூறினர்.

நடிகர்கள் தரப்பில், டப்பிங் பேசும்போது 60 சதவிகித பணத்தைத் தர வேண்டும்எனவும், மீதி பணத்தை திரைப்படம் வெளியாகும் போது கொடுத்தால் போதும்எனவும் கேட்டனர். இதை தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால்தயாரிப்பாளர், நடிகர் - நடிகைகளுக்கு இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்தது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil