»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.ஜி.ஆர். காலத்தில் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக விளங்கிய நடிகர் மாஸ்டர் சேகர், மாடியிலிருந்து தவறிவிழுந்து இறந்தார்.

எம்.ஜி.ஆர். படங்கள் பலவற்றில் அவரது சிறு வயது தோற்றத்தில் நடித்தவர் மாஸ்டர் சேகர். மனிப்பயல், எங்கமாமா மற்றும் இதயவீணை படத்தில் சுட்டிப் பையனாக நடித்து பரவலாக பேசப்பட்டவர். வளர்ந்த பின்னரும்சுமார் 30 படங்களில் நடித்தார். சிலவற்றில் ஹீரோவாகவும் தோன்றினார்.

சினிமா வாய்ப்புகளை இழந்த பிறகு டிவி நாடகங்களில் நடித்து வந்தார். கோடம்பாக்கம் இயக்குனர்கள்காலனியில் இவரது வீடு உள்ளது. இங்கு இரண்டாவது மாடியைக் கட்டி வந்தார் சேகர். கட்டப்பட்டு வரும்கட்டடத்துக்கு நீர் ஊற்றுவதற்காக இரண்டாவது மாடிக்குச் சென்றார்.

அப்போது சரியாக காயாத சிமெண்ட் சிலாபில் காலை வைத்தார். அது உடைந்ததில் இரண்டாவது மாடியில்இருந்து சேகர் கீழே விழுந்தார். தரையில் மோதியதில் மண்டை உடைந்து ரதத வெள்ளத்தில் மயங்கினார்.

உயிருக்குப் போராடிய அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.சேகருக்கு வயது 41. அவகுக்கு மனைவியும், இரு சிறு குழந்தைகளும் உள்ளனர்.

சேகரின் தந்தை விஜயன் பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளராவார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil