twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனைவி மிரட்டல்- கொடுமை: போலீசில் நடிகர் புகார்!! தனக்கு சாப்பாடு போடாமல், அறையில் பூட்டி வைத்து தனது மனைவி கொடுமைப்படுத்துவதாக சென்னை காவல்துறைஆணையரிடம் மலையாள நடிகர் சந்தோஷ் என்ற விஷ்ணு புகார் கொடுத்துள்ளார்.கேரளாவைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது இயற்பெயர் சந்தோஷ். மலையாளப் படங்களில் துக்கடா ரோல்களில் நிறையநடித்துள்ளார். தமிழிலும் வா வா வசந்தமே என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சில தொலைக்காட்சித் தொடர்களிலும்நடித்து வருகிறார்.இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் கொடுத்தார்.அதில், நான் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவன். எனக்கும் எனது மனைவி நிஷாவுக்கும் கடந்த 2001ம் ஆண்டுதிருமணம் நடந்தது. எங்களுக்கு சிவசூர்யா என்ற 3 வயது மகன் உள்ளான்.எனது மனைவி நிஷா சந்தேகப் பேர்வழி. நான் யாராவது பெண்ணுடன் பேசினால் உடனே கோபப்படுவார். பெண்களுடன்பேசவே கூடாது என்று தடை போட்டுள்ளார். எனது பெற்றோருடன் கூட பேசக் கூடாது என்று கூறியுள்ளார்.அவர் சரியாக சமைப்பதும் கிடையாது. அவர் கையால் சமைத்து நான் சாப்பிட்டு பல காலம் ஆகி விட்டது. பல நாட்கள் இரவுச்சாப்பாடே கிடையாது. பட்டினி போடுவார். அத்தோடு நில்லாமல் அவருக்கு கோபம் வந்தால் என்னை அறையில் பூட்டிவைத்துக் கொடுமைப்படுத்துவார். அவரது கொடுமை தாங்க முடியாமல் நான் பிரிந்து வந்து விட்டேன். குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குதொடர்ந்துள்ளேன். இந் நிலையில் எனது குழந்தையைப் பார்க்க விடாமல் நிஷா தடுக்கிறார். நானும், நிஷாவும் சேர்ந்துவாழ்ந்ததற்கு அடையாளமாக எனது குழந்தை உள்ளது.குழந்தையைப் பார்க்க வந்தால் தொலைத்து விடுவேன் என்று போன் மூலம் நிஷா மிரட்டுகிறார். குழந்தையை எங்குவைத்துள்ளார் என்பதும் தெரியவில்லை. எனக்கு எனது மனைவியால் ஆபத்து உள்ளது.எனது மனைவி குறித்து வட பழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸார் எனது வீட்டுக்கு சிலஅடியாட்களுடன் வந்து என்னை மிரட்டி விட்டுச் சென்றனர். எனவே எனது மனைவி மீது நடவடிக்கை எடுத்து எனது உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் விஷ்ணு.இந்தப் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஆணையர் நடராஜ் உத்தரவிட்டுள்ளார்.

    By Staff
    |

    கும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு நடிகர் ரஜினியின்மனைவி லதா இன்று நேரில் ஆறுதல் கூறினார்.

    இந்தத் தீ விபத்தில் கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இன்பராஜின் இரு குழந்தைகளும்பலியாகியுள்ளன. ஆனால், இதுவரை ரஜினியிடம் இருந்து போனில் கூட ஆறுதல் செய்திவரவில்லை என ரஜினி மன்றத்தினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

    மேலும், ரஜினி தனக்கு ஆறுதல் சொல்லாததை சுட்டிக் காட்டி இன்பராஜும் அதிருப்தியுடன்ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்திருந்தார்.

    இந் நிலையில் ஆறுதல் சொல்ல வந்த மன்றத் தலைவர் சத்யநாராணாவை பிலுபிலுவென பிடித்துக்கொண்ட ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.

    கொரியாவில் இருக்கும் கமல், ரூ. 12 லட்சம் நிவாரண உதவி வழங்கியதோடு, அனுதாபச்செய்தியும் அனுப்பினார். ஆனால், திரைப்படத் துறையினர் கும்பகோணம் வந்தபோது கூட ரஜினிவரவில்லை. இதையும் சுட்டிக் காட்டி பத்திரிக்கைகள் எழுதின.

    இந் நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று தஞ்சை வந்தார். அவரை ரசிகர் மன்றத்தினர் பூச்செண்டுகள்கொடுத்து வரவேற்றனர். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்ற லதா, அங்கு சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய பின், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இன்று அவரது தலைமையில் மகாமகக் குளத்தில் இருந்து மெளன ஊர்லமும் நடக்கிறது. இதில்பங்கேற்க சென்னையில் இருந்து 60 ஆசிரம குழந்தைகளையும் கும்பகோணம் அழைத்துவந்துள்ளார் லதா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X