»   »  குஷ்பு, மனோரமாவுக்கு எதிர்ப்பு

குஷ்பு, மனோரமாவுக்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்க செயற்குழு பதவிக்கு குஷ்பு, மனோரமா போட்டியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பில் ராதாரவி, சத்யராஜ். பிரபு, கார்த்திக், மனோரமா, குஷ்பு,ஒய்.ஜி.மகேந்திரன், செந்தில், நாசர், சார்லி, அப்பாஸ், அலெக்ஸ், ரேவதி, பசி சத்யா உள்பட 23 பேர் உள்ளனர்.குண்டு கல்யாணம் உள்பட 5 நியமன உறுப்பினர்களும் உள்ளனர்.

செயற் குழு என்பது நடிகர் சங்கத்தின் பலமான அமைப்பு. அனைத்து முடிவுகளும் இந்தக் குழுவின் ஒப்புதலுடன்தான் நிறைவேற்றப்படுகின்றன. செயற் குழு உறுப்பினர் பொறுப்பில் 2 முறை இருந்தவர்கள் மீண்டும்போட்டியிடக் கூடாது என்று, இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


இதுகுறித்து நடிகர் சங்க மூத்த உறுப்பினர் நல்லதம்பி கூறியதாவது,

குஷ்பு, மனோரமா இருவரும் 2 முறை செயற்குழு உறுப்பினர் பெறுப்பில் இருந்ததுள்ளனர். அவர்கள் மீண்டும்போட்டியிடக் கூடாது. புதியவர்களுக்கு வழி விடவேண்டும்.

நடிகர் சங்கத் தலைவர், செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட 5 முக்கிய பதவிக்கு போட்டியிடுபவர்கள் அணிஅமைக்கக் கூடாது. தனித் தனியாக நிற்க வேண்டும். இது அரசியல் கட்சி அல்ல. நடிகர் சங்கம். எனவேஅணியாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

Please Wait while comments are loading...