இந்தா திரும்ப வந்துட்டாங்கள்ல.. இன்றும் மோதிக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்.. திணறும் டிவிட்டர்!
சென்னை: அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மீண்டும் டிவிட்டரில் ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட்டாக்கி சண்டை போட்டு வருகின்றனர்.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். யாராவது ஒருவரின் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கினால் மற்றொரு நடிகரின் ரசிகர்களும் ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ன்ரெட்டாக்கி விடுகின்றனர்.
அண்மையில் நடிகர் விஜய் குறித்து #RIPactorVIJAY ட்ரென்ட்டானது. அதனை தொடர்ந்து தற்போது #LongLiveVIJAY என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாக்கப்பட்டது.

இன்றும் மோதல்
இதுதொடர்பான சண்டையில் சென்னையில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்நிலையில் இன்றும் இரு நடிகர்களின் ரசிகர்களும் டிவிட்டரில் தங்களின் ரசிகர்களுக்கு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி போட்டி போட்டு ட்ரென்ட்டாக்கி சண்டை போட்டு வருகின்றனர்.

தல அஜித்குமார்
விஜய் ரசிகர்கள் உருவாக்கிய #மண்ணின்மைந்தன்விஜய் ஹேஷ்டேக் டிவிட்டரில் டாப்பில் உள்ளது. அடுத்தப்படியாக அஜித் ரசிகர்களின் #27Yearsofதலஅஜித்குமார் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் உள்ளது.
என்ன வித்தியாசம்?
இந்த ரசிகர் இருவரும் மகிழ்ச்சியடையும் வகையில் இரண்டு ஹேஷ்டேக்குகளை வைத்தும் டிவிட்டியுள்ளார். அதாவது, தல அஜித்: நடிகனை தாண்டிய நல்ல மனிதர்
விஜய் : நடிகனை தாண்டிய நல்ல டான்ஸர். வித்தியாசம் அவ்வளவுதான். என்று கூறியுள்ளார்.
இனிதே வாழ்க
தளபதி மண்ணின் மைந்தன் இல்ல,தளபதி இந்த பூமியின் மைந்தன் அவர்.என்றும் இனிதே வாழ்க என பதிவிட்டுள்ளார் விஜயின் இந்த ரசிகர்.
துரோகியா இருக்கக்கூடாது
ஆயிரம்பேருக்கு #எதிரியா இருக்கலாம்! ஆனா ஒருத்தனுக்குக்கூட #துரோகியா இருக்கக்கூடாது என்று கூறுகிறார் அஜித்தின் இந்த ரசிகர்.
இதான் டேலன்ட்
பைக் ரேஸ் போறதுலாம் டேலண்ட் இல்ல, கார் ரேஸ் போறதுலாம் டேலண்ட் இல்ல, ரைபிள் ஷூட்லாம் டேலண்ட் இல்ல வேற என்ன தான்டா டேலண்ட்.
ஹீரோயின் ஷூவ தடவறது மட்டும் தான் டேலண்ட்.
-அண்ணா விசிறிகள் என்று அஜித்தின் ரசிகரான இவர் விஜயை தாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











