வாழ்வாதாரத்தை இழந்த நடிகர் சங்க உறுப்பினர்கள்… உதவ முன்வந்த நடிகர், நடிகைகள் !
சென்னை : ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல நடிகர், நடிகைகள் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.
அதேபோல, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 50 ஆயிரம் ரூபாயும், நடிகை லதா 25 ரூபாயும் வழங்கி உள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்கம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா 2வது அலை அசுரவேகத்தில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10ந் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

நடிகை, நடிகர்கள் உதவுங்கள்
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் உதவ வேண்டும் என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்க அறக்கட்டளை குழுவின் உறுப்பினர் பூச்சி முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ரூ1 லட்சம் நிதி உதவி
ஊரடங்கால் திரையுலகத்துடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வரும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். அதேபோல, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ. 50 ஆயிரம், நடிகை லதா 25 ஆயிரம், நடிகர் விக்னேஷ் 10 ஆயிரம் வழங்கி உள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டன.

நிவாரண பொருட்கள் வழங்கினார்
இதேபோல பூச்சி முருகன் 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல பழம் பெரும் நடிகை ஜெயச்சித்ரா 200 க்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











