Singapore Saloon: லைஃப்ல பெரிய ஹோப் தெரியுது.. சிங்கப்பூர் சலூன் குறித்து ஜெயம் ரவி உற்சாகம்!
சென்னை: ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், லால், மீனாட்சி சவுத்ரி, தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன். முடி திருத்துபவராகும் தன்னுடைய கனவை நனவாக்க முயற்சிக்கும் ஆர்ஜே பாலாஜி மற்றும் அவர் சந்திக்கும் போராட்டங்களை கதைக்களமாக வைத்து இந்தப் படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் கோகுல். காமெடி என்டர்டெயினராக ரசிகர்களை அதிகமாக கவர்ந்து தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது சிங்கப்பூர் சலூன் படம். அசத்தலான காமெடி காட்சிகளால் இந்தப்படம் அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தில் சத்யராஜ் ஆர்ஜே பாலாஜிக்கு மாமனாராக கஞ்சனாக அதிரடி காட்டியுள்ளார். இவர் வரும் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் படம் காமெடி களத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படம் ரசிகர்களை மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களையும் கவர்ந்துள்ளது. படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்த ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் சிபிராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் திரையரங்குகளில் படத்தை பார்த்துவிட்டு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாராட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சிங்கப்பூர் சலூன் படம்: நடிகர் ஆர்ஜே பாலாஜியின் அடுத்தடுத்த படங்கள் காமெடி கலாட்டா செய்து வருகின்றன. அவரது முந்தைய படங்களில் அரசியல் கலந்து இருந்த நிலையில் தற்போது கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூர் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளன. படத்தில் மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். காமெடி என்டர்டெயினராக வெளியாகியுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளனர்.
படத்திற்கு பலமாக அமைந்த காமெடி: குறிப்பாக ஆர்ஜே பாலாஜியின் மாமனாராக நடித்துள்ள சத்யராஜ், காமெடி கலாட்டா செய்துள்ளார். அவரின் கேரக்டர் படத்திற்கு மிகச்சிறந்த பலமாக அமைந்துள்ளது. மேலும் படத்தின் காமெடி படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இன்றைய தினம் படத்தை பார்த்த ரசிகர்கள் நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக படத்தை பார்த்த நடிகர்களும் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளனர். படத்தை பார்த்த ஜெயம் ரவி, இந்தப் படத்தின்மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய நம்பிக்கை தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.

நடிகர்கள் பாராட்டு: வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற பாசிட்டிவ் விஷயத்தை படம் பேசியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். ஃபேமிலிஸ் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்றும் மேலும் வாழ்க்கையில் பாசிட்டிவிட்டியை தேடிப் போகும் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே படத்தை பார்த்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், படம் மிகப்பெரிய பாசிட்டிவ் படம் என்றும் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்குகளில் சென்று படத்தை பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெற்றி சீக்ரெட் சொன்ன கோகுல்: தொடர்ந்து படத்தை பார்த்துவிட்டு பேசிய நடிகர் சிபி ராஜ், படத்தின் முதல் பாதியில் அதிகமான காமெடி காட்சிகள் உள்ளதாகவும் இரண்டாவது பாதியில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அழகான குடும்ப படத்தை கோகுல் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ள சிபிராஜ், ஒட்டுமொத்த டீமிற்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். படத்தில் எந்தவொரு தொழிலையும் விருப்பத்துடன் மேற்கொண்டால் வெற்றி வசப்படும் என்பதை சிறப்பாக பகிர்ந்துள்ளார் கோகுல்.


Click it and Unblock the Notifications











