twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் உறுதி.. நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு பாரதிராஜா திடீர் வேண்டுகோள்!

    By
    |

    சென்னை: நடிகர்கள், டெக்னீஷியன்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கொரோனா லாக்டவுனால் சினிமா துறை கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகிறார்கள்.

    படத்துக்காக வாங்கிய பைனான்ஸுக்கு வட்டி கட்ட முடியாமலும் இருக்கிறார்கள்.

    பாரதிராஜா வேண்டுகோள்

    பாரதிராஜா வேண்டுகோள்

    இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதையடுத்து நடிகர்கள், டெக்னீஷியன்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று இயக்குனரும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சீக்கிரம் மீண்டுவிடும்

    சீக்கிரம் மீண்டுவிடும்

    தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணி செய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும்.

    நிறுத்தி வைத்திருக்கும்

    நிறுத்தி வைத்திருக்கும்

    கொரோனா தொற்று பரவலில் இருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.

    மீள முடியாத சுமை

    மீள முடியாத சுமை

    அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக்கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பிறரிடம் பணம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம், இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும்.

    நஷ்டம் உறுதி

    நஷ்டம் உறுதி

    தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்த கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்து கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள்.

    தோள் கொடுக்க

    தோள் கொடுக்க

    அவர்களை பாராட்டும் இந்த தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்குத் தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா? தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறையில் அனைத்து நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் தாமே முன்வந்து தங்களின் சம்பளங்களில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுகொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

    நடக்க வேண்டாமா?

    நடக்க வேண்டாமா?

    இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா? எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய் பத்து இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்து தருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.

    வேண்டுகோள் பொருந்தாது

    வேண்டுகோள் பொருந்தாது

    இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களை பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பைக் கொடுத்து 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவக் கேட்டுக் கொள்கிறேன்.

    கைகள் கோர்ப்போம்

    கைகள் கோர்ப்போம்

    தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழ வைப்போம். இவ்வாறு இயக்குனர் பாரதிராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.

    English summary
    Bharathiraja an appeal to all actors & Technicians, to reduce 30% in their payment due to this pandemic impact and help the Producers to release their films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X