இனி உன் கேமிரா கடவுளையும் படம்பிடிக்க செல்கிறது.. கேவி ஆனந்த் மரணம்.. பிரபலங்கள் உருக்கம்!

சென்னை: இயக்குநர் கேவி ஆனந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கேவி ஆனந்த், கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.

முன்னணி ஹீரோக்களை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்த கேவி ஆனந்த் கொரோனாவால் மரணமடைந்ததால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

சமூக வலைதளங்களில் அஞ்சலி

சமூக வலைதளங்களில் அஞ்சலி

கேவி ஆனந்த் மரணமடைந்த சில மணி நேரங்களிலேயே அவரது உடல் சென்னை பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கலும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

பெரும் துக்கம்

இதேபோல் நடிகர் ஜெயம் ரவி பதிவிட்டுள்ள டிவிட்டில் அதிர்ச்சியும் பெரும் துக்கமும் அடைந்துள்ளேன். ரெஸ்ட் இன் பீஸ் கேவி ஆனந்த் சார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

மிஸ் பண்ணுவோம் சார்

நடிகர் ஆர்யா பதிவிட்டுள்ள டிவிட்டில் நம்ப முடியாத அதிர்ச்சி செய்தி.. இதயமே நொறுங்கிவிட்டது.. இந்த விஷயம் உண்மையாக இருக்க கூடாது என்று நினைக்கிறேன்.. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம் சார்.. ரொம்ப சீக்கிரம் போயிட்டீங்க.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மீள முடியவில்லை

நடிகை நதியா பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. ரெஸ்ட் இன் பீஸ் கேவி ஆனந்த் சார் என பதிவிட்டுள்ளார்.

பெரிய திறமைசாலிகள்

இதேபோல் நடிகை குட்டி பத்மினி பதிவிட்டுள்ள டிவிட்டில், திறமையான இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்தின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு பெரிய திறமைசாலிகள் நம்மை விட்டு சென்றுள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

கடவுளையும் படம்பிடிக்க..

பாடலாசிரியர் அருண் பாரதி பதிவிட்டுள்ள டிவிட்டில்..
அழகான காட்சிகளை
படம்பிடித்த மாகலைஞன்
அழியாத சோகத்தை
தந்து சென்றிருக்கிறான்.
இனி உன் கேமிரா
கடவுளையும்
படம்பிடிக்க செல்கிறது.
ஆழ்ந்த இரங்கல் - உன்
ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு
எழும்போதே அதிர்ச்சி

எழும்போதே அதிர்ச்சி

இதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள டிவிட்டில், எழும் போதே என்ன அதிர்ச்சியான செய்தி.. நம்ப முடியவில்லை.. அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் கேவி ஆனந்த் சார் என பதிவிட்டுள்ளார்.

பிரார்த்தனை

நடிகை ஆத்மிகா பதிவிட்டுள்ள டிவிட்டில், மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ரிப் கேவி ஆனந்த் சார் என்றும் அவருடைய குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X