நாளை நடிகர் சங்கத் தேர்தல்.. துணை முதல்வர் ஓபிஎஸுடன் பாண்டவர் அணியினர் திடீர் சந்திப்பு.. பரபரப்பு!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெற நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் பாண்டவர் அணியினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்தனர்.
நடிகர் சங்கத் தேர்தல் நாளை சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உறுப்பினர்கள் நீக்கம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தேர்தலை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாவட்ட பதிவாளர் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுமா நடைபெறாத என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி நாளை நடிகர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாண்டவர் அணியினர் இன்று சந்தித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நடிகர் நாசர், நடிகைகள் கோவை சரளா, சச்சு, மற்றும் நடிகர் ராஜேஷ் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.
பாண்டவர் அணியினர் ஏற்கனவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். இந்நிலையில் இன்று துணை முதல்வரை அவர்கள் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











