twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷுட்டிங் இல்ல.. வருமானமும் இல்ல.. வாடகை கூட கொடுக்க முடியல.. பதற வைக்கும் துணை நடிகர்களின் கதறல்!

    |

    சென்னை: படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்கள் வறுமையால் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.

    Recommended Video

    தலைவனயே கண் கலங்க வெச்சுடுச்சே இந்த corona.. சோகத்தில் ரசிகர்கள் - வீடியோ

    உலகையே மிரட்டி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உலகம் முழுக்க மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது கொரோனா.

     'ரோஜா பூந்தோட்டம்..'சன் டிவியில் 'காதலுக்கு மரியாதை..' அதிரி புதிரியாக டிரெண்டாக்கிய விஜய் ஃபேன்ஸ்! 'ரோஜா பூந்தோட்டம்..'சன் டிவியில் 'காதலுக்கு மரியாதை..' அதிரி புதிரியாக டிரெண்டாக்கிய விஜய் ஃபேன்ஸ்!

    ஊரடங்கு நீட்டிப்பு

    ஊரடங்கு நீட்டிப்பு

    இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டி விட்டது. வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறை முற்றிலும் முடங்கியுள்ளது.

    தினக்கூலி தொழிலாளர்கைள்

    தினக்கூலி தொழிலாளர்கைள்

    குறிப்பாக சினிமாத்துறை படுத்த படுக்கையாகிவிட்டது. படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தியேட்டர் உரிமையாளர்களின் வருமானம், அந்த தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரும் சிரமம்

    பெரும் சிரமம்

    அவர்களுக்கு திரைப்பட தொழிலாளர் சம்மேளனமா ஃபெஃப்ஸி மற்றும் நடிகர்க சங்கம் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும் அனைத்து துணை நடிகர்களுக்கும் இந்த உதவிகள் சென்றடைவதில்லை. பெரும்பாலான துணை நடிகர்கள் வாடகை கூட கொடுக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    துணை நடிகர் கதறல்

    துணை நடிகர் கதறல்

    இந்நிலையில் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள துணை நடிகர் ஒருவர் கதறியிருக்கிறார். பிரபல நடிகர்கள் பலரும் ஃபெஃப்சியான சகோதர கலைக்குழுவுக்கு மட்டும் உதவி செய்கிறார்கள். எங்களுக்கும் உதவ வேண்டும். ஷுட்டிங் இல்லாததால் வருமானம் ஏதுமின்றி தவித்து வருகிறோம். நேற்றுதான் நடிகர் சங்கம் சார்பில் 500 ரூபாய் கொடுத்துள்ளனர்.

    ரிப்போர்ட் அல்ல ரிக்வெஸ்ட்

    ரிப்போர்ட் அல்ல ரிக்வெஸ்ட்

    அதனை வைத்து என்ன செய்ய முடியும். வாடகைக்கூட கொடுக்க முடியவில்லை. இந்த மாதம் வாடகை கொடுக்காவிட்டால் அடுத்த மாதம் சேர்த்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள், என்ன செய்வதென்று தெரியவில்லை. இதை ஒரு ரிப்போர்ட்டாக இல்லாமல் ரிக்வெஸ்ட்டாக சொல்கிறேன்.. ஏதாவது உதவி செய்யுங்கள் என கதறியிருக்கிறார் அந்த நடிகர்.

    மொத்தம் 1500

    மொத்தம் 1500

    இதேபோல் பரணி என்ற நாடகக் கலைஞரும் வாழ்வாதாரத்தை தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள தங்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் 500 ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் 1000 ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஏழை தொழிலாளர்கள்

    ஏழை தொழிலாளர்கள்

    இந்த 1500 ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்வது? குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை கூட செய்ய முடியவில்லை. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். திரை பிரபலங்கள் சகோதர சங்கமான ஃபெஃப்ஸி சங்கத்திற்கு நிறைய உதவி செய்கிறீர்கள். தாய் சங்கமான நடிகர் சங்கத்துக்கும் உதவி செய்தால் என்னை போன்ற எத்தனையோ ஏழை தொழிலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    எத்தனை நாளைக்கு தள்ளிப்போகும்

    எத்தனை நாளைக்கு தள்ளிப்போகும்

    அதேபோல மூத்த உறுப்பினர்கள் பலருக்கு பென்ஷன் கிடைக்கவில்லை. அவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இந்த கொரோனா வைரஸால் நம்முடைய படப்பிடிப்புகள் எத்தனை நாளைக்கு தள்ளி போகும் என்று தெரியவில்லை. அதுவரை இருக்கப்பட் நீங்கள் என்னை போன்றவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் ஏதோ உதவி செய்தால் பேருதவியாக இருக்கும். இவ்வாறு நடிகர் சங்க உறுப்பினர் பரணி தெரிவித்துள்ளார்.

    English summary
    Actors Association members facing problem without income. They are not having money to run routine life and to give house rent.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X