நடிகர் சங்கர்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கோரிய விஷாலின் மனு நிராகரிப்பு! ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர், தலைமையில் பாண்டவர் அணியினரும், பாக்யராஜ், தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். முன்னதாக தேர்தலை ரத்து செய்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுக்கு தடைவிதித்த உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்துவதற்கு அனுமதி அளித்ததோடு, வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்து. இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 23ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது, இதில் திரை நட்சத்திரங்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்குகளை எண்ண உத்தரவிடும்படி நடிகர் விஷால் தரப்பு கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications











