Fahadh -Vadivelu new movie: பகத் ஃபாசில் -வடிவேலு நடிக்கும் படத்தின் கதை இதுதானா.. வெளியான அப்டேட்!
சென்னை: நடிகர் உதயநிதியின் மாமன்னன் படத்தில் அவருடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது. அழுத்தமான கேரக்டர்களில் ரசிகர்களை இவர்கள் வெகுவாக கவர்ந்தனர். குறிப்பாக இந்தப் படம் வடிவேலுவிற்கு அவரது கேரக்டர் பர்மாமென்சை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்பி சௌத்ரியின் சூப்பர் கட் பிலிம்சின் 98வது படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் வெளியான ஆறு மனமே என்ற படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இயக்குநர் சுதீஷ் சங்கர் இந்தப் படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். முன்னதாக இவர் மலையாளத்தில் திலீப் நடிப்பில் வில்லாலி வீரன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இதனிடையே, அடுத்ததாக இவர் தமிழில் இயக்கவுள்ள பகத் ஃபாசில் -வடிவேலு படத்தின் சூட்டிங் இம்மாதம் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமன்னன் படம்: நடிகர் உதயநிதி லீட் கேரக்டரில் நடித்திருந்த மாமன்னன் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. உதயநிதி தற்போது தமிழக அமைச்சராகியுள்ள நிலையில், அவரது இறுதிப்படமாக மாமன்னன் அமைந்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வடிவேலு மற்றும் பகத் ஃபாசிலுக்கு அழுத்தமான கேரக்டர்கள் அமைந்தன. அவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
சிறப்பான வடிவேலு -பகத் ஃபாசில் நடிப்பு: படத்தில் அடக்குமுறையின் விரக்தியில் கையில் கத்தி எடுக்கும் வடிவேலுவிற்கு இந்தப் படத்தில் அதிகமான வரவேற்பு காணப்பட்டது. அதிகமான காமெடி தளங்களிலேயே தன்னை வெளிப்படுத்திவந்த வடிவேலுவின் கேரியர் பெஸ்ட் படமாக மாமன்னன் படம் அமைந்தது. இந்நிலையில் படத்தில் நாயை இரக்கமின்றி அடித்துக் கொல்லும் வில்லனாக அறிமுகமாகும் பகத் ஃபாசிலின் மிரட்டல் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. தன்னுடைய பாடி லேங்குவேஜ் மூலமே அதிகமான வில்லத்தனத்தை இவர் காட்டியிருந்தார்.
மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி: இந்நிலையில் வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளது. இந்தப் படம் நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவாகவுள்ளதாகவும் படத்தின் சூட்டிங் இம்மாதம் துவங்கவுள்ளதாகவும் தற்போது அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாள படங்களை இயக்கியுள்ள சுதீஷ் சங்கர் இயக்கவுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை திரில்லர் படம்: இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படம் சாலைப்பயணம் மேற்கொள்ளும் இரு நபர்களின் பயணத்தை நகைச்சுவையாக துவங்கி, திரில்லர் கதைக்களத்துடன் முடிப்பதாக அமையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. வடிவேலுவும் பகத் ஃபாசிலும் மேற்கொள்ளும் இந்தப்பயணம் நாகர்கோயிலில் துவங்கி பொள்ளாச்சி செல்லும் வகையில் அமையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் சமூக பிரச்சினையை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளதாகவும் விரைவில் படத்தின் போஸ்டர் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாமன்னன் படத்தில் கலக்கிய வடிவேலு -பகத் ஃபாசிலுக்கு இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











