பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணான கண்ணே.. போட்டி போட்டு ட்ரென்ட்டாக்கும் நடிகர்களின் ரசிகர்கள்!#HBDImman
சென்னை: இசையமைப்பாளர் டி இமானின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டி இமான், 2002ஆம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இமான்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் இமான். தமிழில் முன்னணி இசையமைப்பளார்களில் ஒருவராக வலம் வருகிறார்.

ரசிகர் பட்டாளம்
கடந்த ஆண்டு அவர் இசையமைத்த விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடல் பல விருதுகளை குவித்துள்ளது. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ள இமான், தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

முன்மாதிரியாக
அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் இமான். அதேபோல் திறமை உள்ளவர்களை கைப்பிடித்து தூக்கிவிடுவதிலும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் இமான்.

ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில் இசையமைப்பாளர் இமான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர்களின் ரசிகர்களும் அவரை வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.

சென்னை ட்ரென்டிங்
சமூக வலைதளங்களில் #HBDImman, #HBDImmanByTHALAFans ஆகிய ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்குகள் சென்னை ட்ரென்டிங்கில் டாப் 5ல் உள்ளது.
சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
கும்முறு டப்புறு இசையமைப்பாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சார்பில் ஸ்பெஷல் வாழ்த்து. உங்களுடைய அப்கம்மிங் புராஜெக்ட்ஸ்க்கு ஆல் த பெஸ்ட் என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.

அஜித் ரசிகர்கள்
அஜித் ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள் இமான் சார்.. எல்லாவற்றிலும் வெற்றி பெற வாழ்த்துகள் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
விஜய் ரசிகர்கள்
நம்ம ஜில்லா பட இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. தளபதி அண்ணா ரசிகர்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள் என்று ரசிகர்.
கண்ணான கண்ணே
பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணான கண்ணே.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











