Don't Miss!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- News
காதலுக்கு எல்லை கிடையாது.. கடல் கடந்த காதல்.. ஹாங்காங் பெண்ணை மணந்த புதுக்கோட்டை இளைஞர்
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Finance
அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மாஸ் காட்டும் அஜித்தின் வலிமை... பிரபலங்கள் வாழ்த்து
சென்னை : நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து இன்றைய தினம் வலிமை படம் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படத்தை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே படத்தின் வெற்றிக்கு பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மாஸ்டர்
Vs
வலிமை....
விஜய்யின்
மாஸ்டர்
முதல்நாள்
வசூலை
மிஞ்சுமாக
அஜித்தின்
வலிமை
?

அஜித்தின் வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வலிமை படம் ரிலீசாகியுள்ளது. உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள இந்தப் படம் அஜித்தின் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமான அளவில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் வலிமை மற்றும் போனி கபூர் ட்ரெண்டிங்கில் உள்ளனர். படத்தை ரசிகர்களுடன் போனி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் சென்னையில் திரையரங்குகளில் சென்று பார்த்துள்ளனர்.

பிரபலங்கள் ஆர்வம்
இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களும் முன்னதாக முதல் நாள் முதல் ஷோவிற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். பலரின் பூரிப்பிற்கு இந்தப் படம் காரணமாக அமைந்துள்ளனர். ரசிகர்களும் திரையரங்குகளில் குவிந்து படத்தை பார்க்க ஆர்வம் காட்டினர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள அஜித்தின் இந்தப் படத்தை கொண்டாட்டத்துடன் பார்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித் கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் மற்றும் பைக் ரேஸ் உள்ளிட்டவற்றையும் அவர்கள் திரையரங்குகளில் செய்ததை பார்க்க முடிந்தது. இதுமட்டுமின்றி போனிகபூர் காருக்கும் அவர்கள் பாலபிஷேகம் செய்தனர். இதனிடையே படத்தின் வெற்றிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் வாழ்த்து
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கடின உழைப்பிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல நடிகர் ஆர்யாவும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

திரையுலக பிரபலங்கள் வாழ்த்து
இதேபோல
இயக்குநர்
வெங்கட்பிரபு,
வரலட்சுமி
சரத்குமார்,
பார்வதி,
கௌதம்
கார்த்திக்,
கலையரசன்,
ரம்யா
சுப்ரமணியன்,
அர்ச்சனா
கல்பாத்தி
உள்ளிட்டவர்களும்
தங்களது
ட்விட்டர்
பக்கத்தில்
படத்தின்
வெற்றிக்காக
வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.
இதை
தவிர்த்து
மகேஷ்பாபு
உள்ளிட்ட
நடிகர்களின்
ரசிகர்களும்
படத்திற்கு
வாழ்த்து
கூறியுள்ளனர்.