Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
சென்னை: இந்த 2024ம் ஆண்டு கோலிவுட்டிற்கு சிறப்பாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டியிட்டன. இந்த நான்கு படங்களுமே ரசிகர்களை கவர்ந்து சிறப்பான வசூலையும் பெற்றன. குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்து இரு படங்களை இயக்கி முடித்துள்ளார்.
தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷின் படத்தின் ரிலீசில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படம் மே மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படமும் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தியன் 2.

அடுத்தடுத்த படங்கள்: கடந்த ஆண்டை போலவே 2024ம் ஆண்டும் தமிழ் சினிமாவிற்கு சிறப்பான காலகட்டமாக அமைந்துள்ளது. ஆண்டின் துவக்கத்திலேயே அடுத்தடுத்து சிறப்பான பல படங்கள் ரிலீசானதை பார்க்க முடிந்தது. தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன் என பொங்கலையொட்டி அடுத்தடுத்து நான்கு படங்கள் ரிலீசான நிலையில் நான்கு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
தனுஷின் ராயன் படம்: இந்நிலையில் தனுஷின் ராயன் படம் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகக உள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதையொட்டி ராயன் படத்தின் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.
கமல்ஹாசனின் இந்தியன் 2: இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படமும் ரிலீசுக்கு தயாராகி தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. இதனால் இந்த படமும் மே மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடைய தனுஷின் ராயன் படம் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படங்கள் ஒரே நாளில் அதாவது மே 16ம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படம் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து உருவாகியுள்ளது.
கொண்டாட தயாராகும் ரசிகர்கள்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல் காட்சிகள் சமீபத்தில் அடுத்தடுத்து சென்னையில் எடுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த படம் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாகவும் அதே நேரத்தில் தனுஷின் ராயன் படமும் ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இரு படங்களும் ஒரே நாளில் அதுவும் கோடை கொண்டாட்டமாக வெளியாகும் சூழலில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications