என் அன்புத் தம்பி விஜய்க்கு... கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து! ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: நடிகர் விஜய்க்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜயின் பிறந்த நாளை வைத்து சமூக வலைதளங்கள் அல்லோகளப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் என்றும் தல என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து டாப்பாக்கி உள்ளனர்.

சூடான டிவிட்டர்
இதேபோல் சூர்யா, ரசிகர்களும் #1MonthToSURIYABdayBash என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கியுள்ளனர். இதனால் டிவிட்டர் தளம் படுசூடாக உள்ளது.
கமல் வாழ்த்து
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் என் அன்பு தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
வெறித்தனம்
இதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஒரு வார்த்தை! வெறித்தனம்! பிகில் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன் அன்ட் ஒன்லி தளபதி விஜய் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. பெஸ்ட் விஷஸ் நண்பாஸ் என குறிப்பிட்டுள்ளார்.
மோகன்லால் வாழ்த்து
இதேபோல் நடிகர் மோகன்லால் பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்த நாள் வாழ்த்துகள் டியர் விஜய் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











