Kavin & Pradeep: பப்ஜிக்காக எல்லாம் கேவலமா சண்டை போட்டிருக்கோம்.. பிரதீப் நட்பு குறித்து கவின் பளீச்
சென்னை: நடிகர்கள் கவின் மற்றும் பிரதீப் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் பிரபலமானவர்கள்.
இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளை கடந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட நிலையில், முதல் நபராக கவின் குரல் கொடுத்திருந்தார்.

நடிகர்கள் கவின் -பிரதீப்: நடிகர் கவின் மற்றும் பிரதீப் இருவரும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களாக உள்ளனர். நடிகர் கவின் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமாகி, அதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி கொடுத்த புகழை சரியாக பிடித்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது லிப்ட், டாடா படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
ஆண்டுகளை கடந்த நட்பு: இதேபோல பிரதீப்பும் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான வாழ் என்ற படத்தில் நடிகராகவும் அருவி படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். பள்ளி காலத்தில் துவங்கிய இவர்களது நட்பு, கல்லூரியிலும் தொடர்ந்தநிலையில் தற்போது திரைத்துறையில் இருவரும் பயணம் செய்து வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின்மூலம் மிகப்பெரிய பிரபலத்தை பிரதீப்பும் பெற்றுள்ளார்.
பிரதீப்பிற்கு குரல் கொடுத்த கவின்: தற்போது நடந்துவரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் துவக்கத்திலேயே 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய பிரதீப், அடுத்தடுத்த பரபரப்புகளை கிளப்பிய நிலையில், கடந்த வாரத்தில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.இவரது இந்த எலிமினேஷன் பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பிரதீப்பின் இந்த எலிமினேஷன் குறித்து கவின் கேள்வி எழுப்பியிருந்தார்.
கூட்டாக பேட்டி: இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்துள்ள பேட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்ட நிலையில், அதிலிருந்து தான் மீள பிரதீப் உள்ளிட்ட நண்பர்கள்தான் காரணம் என்றும் கவின் தெரிவித்துள்ளார். தான் எழுந்து நடக்க 40 நாட்களுக்கும் மேல் ஆகும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், 25 நாட்களிலேயே தான் நடக்க பிரதீப் உள்ளிட்ட நண்பர்கள்தான் காரணம் என்றும் கவின் கூறியுள்ளார்.
பப்ஜிக்காக சண்டை: இதுவரை பிரதீப்புடன் அதிகமான சண்டைகளை தான் போட்டுள்ளதாகவும் சப்பை விஷயங்களுக்காக தாங்கள் இருவரும் அடித்துக் கொள்வோம் என்றும் சில நேரங்களில் அழும் நிலைக்கும் செல்வோம் என்றும் கவின் தெரிவித்துள்ளார். பப்ஜியில் ரிவைவ் செய்ய வரவில்லை என்பதற்காககூட தாங்கள் இருவரும் கேவலமாக சண்டை போட்டுள்ளதாக பிரதீப்பும் கூறியுள்ளார். தான் கவினை சண்டையின்போது அடித்துள்ளதாகவும் இந்த பேட்டியின்போது அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











