பிரபல நடிகர் கேகேபி.கோபாலகிருஷ்ணன் காலமானார்.. நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு மாமாவாக நடித்தவர்!

சென்னை: பிரபல நடிகர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் இன்று திடீரென காலமானார். அவருக்கு வயது 54.

ஈரோடு மாவட்டம் குப்பகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடிகர் கேகேபி கோபாலகிருஷ்ணன். இவர் சசிக்குமாரின் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு மாமாவாகவும் நடிகை அனன்யாவுக்கு அப்பாவாகவும் நடித்துள்ளார்.

Actors KKB Gopalakrishanan passes away at the age of 54

இதேபோல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலும் நடிகர் சத்யராஜிக்கு ஜால்ரா போடும் நான்கு பேரில் ஒருவராக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கேகேபி கோபாலகிருஷ்ணன். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் கேகேபி கோபாலகிருஷ்ணனின் உயிர் பிரிந்தது.

ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்களின் மத்தியில் பெரும் பிரபலமானார் கேகேபி கோபாலகிருஷ்ணன். அவரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் கேகேபி கோபாலகிருஷ்ணனின் மறைவு செய்தியை கேட்டு திரைத்துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான குப்பகவுண்டம்பாளையத்தில் நடைபெறும் என தெரிகிறது.

சீமராஜா படத்தில் இவர் சமந்தாவின் அப்பாவாக வந்து, அமைதியான நடிப்பால் பேசப்பட்டார். நாடோடிகள் படத்தில் இவரிடம் சசிகுமார் பேசும் பட் அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு என்ற வசனம் மிகவும் பிரபலமானது என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Read more about: passes away மரணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X