Don't Miss!
- News
அதே ஈரோடு.. அதே இளங்கோவன்.. யாரது? அண்ணாமலையின் "பக்கா டைமிங்".. அறியப்படாத அதிசய மனிதர் என வாழ்த்து
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- Technology
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
என்னடா பித்தலாட்டம் இது.. நடிகர்களையே ஏமாற்றிய அஜித் போட்டோ எடிட்.. வச்சு செய்யும் விஜய் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் அஜித் செம ஸ்மார்ட்டாகவும் ஸ்லிம்மாகவும் ஒயிட் ஷர்ட் அணிந்து கொண்டு கையில் ஜூஸ் கிளாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை ஃபயர் விட்டு நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர்.
ஆனால், அந்த போட்டோ ஒரு மாடல் நடிகரின் போட்டோவுடன் எடிட் செய்யப்பட்டது என விஜய் ரசிகர்கள் ரியல் போட்டோ என ஒரு போட்டோவை போட்டு பிரபலங்களை கலாய்த்து வருகின்றனர்.
ட்ரைலர்
ஹிட்டு...
படம்
ஃபிளாப்:
2022ம்
ஆண்டில்
ரசிகர்களை
ஏமாற்றிய
டாப்
ஹீரோஸ்
மூவிஸ்

அஜித்தா இது
நடிகர் அஜித் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு கையில் ஜூஸ் கிளாஸ் வைத்திருப்பது போன்ற தரமான மாஸ் போட்டோவை நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அஜித்தா இது? என பல சினிமா பிரபலங்களே இந்த போட்டோவை பார்த்து ஷாக் ஆகி லைக்குகளை போட ஆரம்பித்தனர்.

ஓ மை காட் சொன்ன பிரசன்னா
நடிகர் அஜித்தின் புதிய லுக் என்ன இப்படி இருக்கே என்று நினைத்த நடிகர் பிரசன்னா வாவ் என கமெண்ட் போட்டு தனது லைக்கை தட்டி விட்டார். ஆனால், இது நடிகர் அஜித்தின் புகைப்படம் அல்ல என விஜய் ரசிகர்கள் போட்ட ட்வீட் தான் அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

என்ன பித்தலாட்டம் இது
என்னடா பித்தலாட்டம் இது என கமெண்ட் போட்டு அந்த போட்டோவில் இருப்பது நடிகர் அஜித்தே கிடையாது. அது ஒரு மாடல் நடிகரின் போட்டோவை சுட்டு செய்யப்பட்ட எடிட் இதை ரசிகர்கள் டிரெண்ட் செய்த நிலையில், தற்போது சினிமா நடிகர்களே டிரெண்ட் செய்து ஃபயர் விடுகின்றனரே என விஜய் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ராதிகாவும் ஏமாந்து விட்டார்
நடிகை ராதிகாவும் அஜித்தின் இந்த போட்டோவை உண்மையென நினைத்து சூப்பர் என கமெண்ட் போட்டு ரசிகர்கள் கலாயில் சிக்கி உள்ளார். வாரிசு இசை வெளியீட்டை முன்னிட்டு புதிய போட்டோ ஏதும் வெளியாகாத நிலையில், இப்படி கிளப்பி விடுகின்றனரா என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.