பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு வேண்டுகோள்.. வீட்டில் இருந்து ஆதரவு தெரிவித்த முன்னணி நடிகர்கள்!

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இன்று அறிவிக்கப்பட்ட மக்கள் ஊரடங்குக்கு பல்வேறு நடிகர்களும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் உலகம் நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

ஆதரவு

ஆதரவு

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இன்று இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டது. மோடியின் இந்த வேண்டுகோளுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

மேடி வீடியோ

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பவன் கல்யாண் ஆமீர் கான், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதுதொடர்பாக நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியதைச் செய்கிறீர்கள், இதுபோன்ற நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்கிறீர்கள் என்று நம்புகிறேன். இது நம் வாழ்வில் ஒரு தனித்துவமான வரலாற்று கட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

சிறந்த முயற்சி

இதேபோல் நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட வீடியோவில் நான் வீட்டிலேயே இருக்கிறேன், நீங்கள் அனைவரும் அவ்வாறே செய்கிறீர்கள் என்று நம்புகிறேன்! மக்கள் ஊரடங்கு என்பது கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பதிலும் முறியடிப்பதிலும் நாடு முழுவதும் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு சிறந்த முயற்சி என பதிவிட்டுள்ளார்.

தாய் புறா

இதேபோல் நடிகர் நானியும் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் முழு நகரமும் அமைதியாகவும், சத்தம் மற்றும் காற்று மாசு இல்லாமல் இருப்பதாக கூறினார். ஒரு தாய் புறா தனது குழந்தைக்கு உணவளிப்பதையும் அமைதியை அனுபவிப்பதையும் அவர் தனது வீடியோவில் காண்பித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X