கடலுக்கடியில் சூட்டிங்..சேர்ந்து சாப்பிட்ட நடிகர்கள்...பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் சுவாரஸ்யம்!
மும்பை : மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று பின்னணியுடன் எடுக்கப்பட்டு வரும் படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படம்
மணிரத்னம் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கியின் எழுத்தில் அனைவரையும் கவர்ந்த நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்திற்கு மேலும் சிறப்பை சேர்க்கும்வகையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 30ல் ரிலீஸ்
10ம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் அதிகாரப் போராட்டம், சூழ்ச்சிகள், படையெடுப்புகள் உள்ளிட்டவை இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. படத்தின் முதல் பாகமே வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்த பாகமும் எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு
சமீபத்தில் படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்த புகைப்படங்கள் இணையதளத்தை மிகவும் ட்ரெண்டாகின. இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் இப்போதே எதிர்நோக்கியுள்ளனர்.

கடலுக்கடியில் சூட்டிங்
படத்தின் சூட்டிங் பெருமளவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் கடலுக்கடியில் படமாக்க திட்டமிடப்பட்டு ஆனால் அதற்கான அனுமதிக்காக படக்குழு காத்திருந்தது. இந்நிலையில் இதன் அனுமதி கிடைத்ததையடுத்து தற்போது மும்பையில் கடலுக்கடியிலான சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

தப்பியோடும் வந்தியத்தேவன் காட்சிகள்
வந்தியத் தேவன் கப்பலிலிருந்து குதித்து தப்பியோடும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுள்ளன. மேலும் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் பங்கேற்ற சில பேட்ச் வொர்க் காட்சிகளும் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளன. இதனிடையே மும்பையில் சூட்டிங்கை முடித்துக் கொண்டு ஒரே ஹோட்டலில் கார்த்தியும் ஜெயம் ரவியும் சாப்பிட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

சென்னை திரும்பிய ஜெயம்ரவி
ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டதையடுத்து அவர் சென்னை திரும்பியுள்ளார். மற்றவர்கள் தொடர்ந்து சூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர். இந்த சூட்டிங் சில நாட்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











