Don't Miss!
- Education
CISF constable, Driver Recruitment 2023:டிரைவிங் தெரியும்? சி.ஐ.எஸ்.எஃப்.,இல் ரூ.69 ஆயிரத்தில் வேலை...!
- Lifestyle
தக்காளி சாஸ் வெச்சு இத்தனை பொருட்களை சுத்தம் செய்ய முடியுமா? இத படிச்சு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Automobiles
2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
- Sports
முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
- News
"ரெக்கார்டு".. 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து.. சாதனை செய்த கோவை பெண்.. சபாஷ்
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
ரஜினியுடன் ஜெயிலர் சூட்டிங்கில் இணையும் மோகன்லால்.. சூட்டிங் எங்க நடக்குது தெரியுமா?
சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில், மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர்.
படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான அளவில் செட் போடப்பட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கில் படக்குழு ஈடுபடவுள்ளது.
எத்தனை
வயசானாலும்..
விஜய்
எனக்கு
குழந்தை
தான்..மனம்
திறந்த
எஸ்.ஏ.சந்திரசேகர்
!

ரஜினியின் ஜெயிலர் படம்
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தற்போது அவரது அடுத்தப்படமான ஜெயிலர் படத்தை தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்தில் அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக வைத்து தயாரித்த சன் பிக்சர்ஸ், இந்தப் படத்தை சீரியஸ் களத்தில் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்பார்ப்பில் ஜெயிலர் படம்
ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ரஜினியின் 169வது படமாக உருவாகி வருகிறது ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். மிகவும் எதிர்பார்ப்பிற்கு ஜெயிலர் படம் உள்ளாகியுள்ளது.

ரஜினிக்கு ஜோடியாகும் தமன்னா
இந்தப் படத்தின் புதிய வரவாக நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார். இவரது இணைப்பு படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இவர் ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரஜினி -மோகன்லால் காட்சிகள்
படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ள நிலையில், ரஜினி மற்றும் மோகன்லால் காம்பினேஷன் காட்சிகள் ராஜஸ்தானில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஷெட்யூல் மிகச்சிறிய நாட்களே நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் சூட்டிங் ராஜஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், அங்கேயே ஜெயிலர் சூட்டிங்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனிருத் இசை
அனிருத் இசையில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரிலீசாகவுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.