ரஜினி -ஷாருக் -சிவகார்த்திகேயன் மூணு பேரும் சந்திக்கப் போறாங்க.. எதுக்காக தெரியுமா?
சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் சூட்டிங் எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் நேற்றைய தினம் துவங்கியுள்ளது.
Recommended Video
இந்தப் படத்தை இயக்குநர் நெல்சல் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங்கில் ரஜினி கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் கலவையான விமர்சனங்களையே அந்தப் படத்திற்காக பெற்றிருந்தார்.

ரஜினியின் ஜெயிலர் படம்
நடிகர் ரஜினிகாந்த்தின் 169வது படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில், நேற்றைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் எளிமையாக துவங்கியுள்ளது. இதுகுறித்து படத்தில் இணைந்துள்ள ரம்யா கிருஷ்ணன் அப்டேட் தெரிவித்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் அப்டேட்
இந்தப் படத்தின் சூட்டிங்கில் நேற்றைய தினம் ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் வசந்த் ரவி ஆகியோர் கலந்துக் கொண்டதாகவும் ரஜினிகாந்த் வரும் 15ம் தேதி அல்லது 22ம் தேதி சூட்டிங்கில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஜெயிலர் படத்தை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் வைத்துள்ளார்.

ஆக்ஷன் த்ரில்லர் கதை
ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை நெல்சன் சிறப்பாக வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது முந்தைய படமான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து ரஜினி படத்திலிருந்து அவர் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அறிவித்தபடி அவரே ரஜினியை இயக்கவுள்ளார்.

நட்சத்திரப் பட்டாளம்
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன், சிவகார்த்திகேயன் ஆகியோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி தற்போது படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

சென்னையில் சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் உள்ள பிரபல படப்பிடிப்பு தளத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதே இடத்தில் நடிகர் ஷாருக்கின் ஜவான் மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய படங்களின் சூட்டிங்கும் துவங்கவுள்ளன. இதையடுத்து இந்தியாவின் சூப்பர் ஹீரோக்களான இவர்கள் மூவரும் சந்தித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிக்க காத்திருக்கும் சந்திப்பு
அவ்வாறு அவர்கள் சந்தித்துக் கொண்டால் கண்டிப்பாக புகைப்படங்கள் வெளியாகி இணையதளத்தில் தெறிக்கும். அது இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் புகைப்படமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். ஷாருக்கானின் ஜவான் படத்தை அட்லி இயக்கிவரும் நிலையில், ஏறக்குறைய படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பில் மாவீரன்
இதையடுத்து சென்னையில் நடைபெறவுள்ள சூட்டிங்கில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்கள் இன்னும் சில தினங்களில் உறுதியாகிவிடும். இதேபோல சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











