தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து.. நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளைய தினம் தன்னுடைய 70வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இதையொட்டி அவருக்கு இன்று முதலே வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நாளைய தினம் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் கட்சியினர் மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் ஒரு நாள் முன்னதாகவே தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளனர். கமலும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

முக ஸ்டாலின் பிறந்தநாள்

முக ஸ்டாலின் பிறந்தநாள்

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளைய தினம் தனது 70வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி, கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பிரபலங்கள் என பலரும் இன்று முதலே தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாகவே ரஜினி வாழ்த்து

முன்னதாகவே ரஜினி வாழ்த்து

இந்நிலையில் ஒரு நாள் முன்னதாகவே நடிகர் ரஜினிகாந்த், முக ஸ்டாலினுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வீடியோ மூலம் அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் தன்னுடைய இனிய நண்பர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் என்று குறிப்பிட்டுள்ளார்.

இனிய நண்பர் முக ஸ்டாலின்

இனிய நண்பர் முக ஸ்டாலின்

முக ஸ்டாலின் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துவதாக அந்த வீடியோவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 24ம் தேதி மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கும் ரஜினி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 கமல்ஹாசனும் வாழ்த்து

கமல்ஹாசனும் வாழ்த்து

இதேபோல முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றுவரும் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தொடங்கி வைத்து முக ஸ்டாலினுக்கு இன்றே பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதல்வருடன் செல்ஃபி

முதல்வருடன் செல்ஃபி

முதல்வரின் பிறந்தநாளையொட்டி பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும்வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி முதல்வருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை பதிவு செய்யவும் செல்ஃபி வித் சிம் என்ற முறையில் முக ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X