உலக செஸ் சாம்பியன் குகேஷ்.. பாராட்டி பரிசளித்த சிவகார்த்திகேயன்.. ரஜினி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கிராண்ட்மாஸ்டர் குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். குகேஷ் சிறு வயதில் இருந்தே சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர் என்பதை தெரிந்து கொண்ட, சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸாக அவரை சந்தித்து அன்பு பரிசு ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான 18 வயதே ஆன குகேஷ் தொம்மராஜு ஆடினார். இருவருக்கும் இடையில் 14 சுற்றுகள் நடைபெற்றன. முதல் சுற்றில், குகேஷின் கை ஓங்கியிருந்தாலும், அதன் பின் டிங் லிரேன் தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராடினார். ஒன்பதாவது சுற்றின் முடிவில், இருவரும் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து, 14வது சுற்றில்,குகேஷ் விளையாடி வெற்றி பெற்றார்.

world chess champion gukesh rajinikanth sivakarthikeyan

உலக செஸ் சாம்பியன்: 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு, பிரதமர் மோடி முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரை பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். தமிழக அரசு, சென்னை, கலைவாணர் அரங்கில் உலக செஸ் சாம்பியன் குகேஷு பாராட்டி ரூ.5 கோடி பரிசு வழங்கியது.

world chess champion gukesh rajinikanth sivakarthikeyan

அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷை பாராட்டுகிறேன். சீன நாட்டை சேர்ந்த சாம்பியனை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறேன். இன்றைக்கு குகேஷை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. இங்கே எதிரே அமர்ந்திருக்கக்கூடிய அவருடைய பெற்றோரைப்போல நானும் மகிழ்ச்சியிலும், பெருமையிலும் இருந்து கொண்டிருக்கிறேன் என்றார்.

world chess champion gukesh rajinikanth sivakarthikeyan

பாராட்டிய ரஜினிகாந்த்: இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நடிகர் ரஜினிகாந்த், வீட்டிற்கு அழைத்து பாராட்டி, யோகியின் சுயசரிதை புத்தகத்தை பரிசளித்து பாராட்டினார். அதே போல, சிவகார்த்திகேயன் குகேசை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.குகேஷ் சிறு வயதில் இருந்தே சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர் என்பதை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன், குகேஷை மகிழ்விக்க அவரை சர்ப்ரைஸாக சந்தித்து விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார். அப்போது, எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

world chess champion gukesh rajinikanth sivakarthikeyan

கைவசம் உள்ள படம்: அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இப்படத்தில் சிவகார்த்திகேயன் அந்த ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது சிவகார்த்திகேயன், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்கரா இயக்ககத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார்.

world chess champion gukesh rajinikanth sivakarthikeyan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X