பலமுறை போன் செய்த மேனேஜர்.. பதில் சொல்லாத நம்பர் நடிகை.. கோபத்தில் ஹீரோ!
ஹைதராபாத்: நடிகை நயன்தாரா சொன்னப்படி பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் முன்னணி ஹீரோ ஒருவர் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஹிட்டாவதால் தங்களின் படங்களில் அவரை நடிக்க வைக்க நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடிகை நயன்தாராவும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே தேர்வு செய்து வருகிறார். அதே நேரத்தில் தான் நடிக்கும் எந்த படத்துக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற முடிவில் உள்ளார் நயன்தாரா.

புறக்கணிக்கும் நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் வெளியாகும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் படத்தின் ஹீரோ உட்பட மற்ற அனைவரும் ஆஜர் ஆகிவிடுகின்றனர். ஆனால் நயன்தாரா மட்டும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.

சைரா நரசிம்ம ரெட்டி
இந்நிலையில் சிரஞ்சீவியுடன் ஜோடியாக சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. சிரஞ்சீவி மகன் ராம் சரண் படத்தை தயாரிக்கிறார்.

ஒப்பந்தம் செய்யும் போதே
படத்திற்கு ஒப்பந்தம் செய்யும்போதே பல கோடி செலவில் இப்படம் தயாரிக்கப்படுவதால் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று ராம் சரண் நயன்தாரா விடம் கேட்டுக்கொண்டார்.

அடுத்த மாதம் ரிலீஸ்
பெரிய பட்ஜெட் படம் என்பதால் நயன்தாராவும் கலந்துகொள்வதாக உறுதியளித்தார். படத்தின் வேலைகள் முடிந்து அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

போன் எடுக்கவில்லை
இந்நிலையில் புரமோஷன் வேலைகளில் ராம் சரண் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார். புரமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாராவை பங்கேற்க அழைக்க ராம சரணின் மேனேஜர் நயன்தாராவை பலமுறை போனில் அழைத்தும் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

கோபம்
நயன்தாராவின் இந்த நடவடிக்கையால் சிரஞ்சீவியும், ராம் சரணும் அவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கோடி கோடியாக அள்ளி கொட்டி படம் பண்ணும் நிலையில் ஹீரோயின்கள் இப்படி செய்யலாமா என்றும் டோலிவுட்டில் பேச்சு நிலவுகிறதாம்.


Click it and Unblock the Notifications











