சில வருட காதல்.. நடிகருடன் பிரபல நடிகை திடீர் திருமண நிச்சயதார்த்தம்.. திரையுலகினர் வாழ்த்து!
கொச்சி: ஒரு அடார் லவ் பட நடிகைக்கு தனது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நடிகை பிரியா வாரியர், கண்களை சிமிட்டும் காட்சிக்காகப் பரபரப்பாகப் பேசப்பட்ட படம், ஒரு அடார் லவ்.
மலையாளப் படமான இது பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

ரொமான்டிக் காமெடி
படத்தை ஓமர் லுலு இயக்கி இருந்தார். ஷான் ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் பிரியா பிரகாஷ் வாரியர், ரோஷன் அப்துல் ரஹுப், ரோஷ்னா அன் ராய் உட்பட பலர் நடித்திருந்தனர். ரொமான்டிக் காமெடி படமான இது, மலையாளத்தில் கவனிக்கப்பட்ட அளவுக்கு தமிழில் பெரிய வெற்றி பெறவில்லை.

பயாலஜி டீச்சர்
இந்தப் படத்தில் பயாலஜி டீச்சராக அசத்தலாக நடித்திருந்தவர், நடிகை ரோஷ்னா அன் ராய். இவர் இந்தப் படத்தை அடுத்து, பாபம் செய்யதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உட்பட சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவரும், மலையாளத்தில் ஹிட்டான அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த கிச்சு டெல்லஸும் சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

மவுனம் காத்தனர்
முதலில் நட்பாக பழகிய அவர்கள் பிறகு, காதலில் விழுந்தனர். இந்த காதல் பற்றி செய்திகள் வெளியான போது இருவரும் மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார், நடிகை ரோஷ்னா அன் ராய்.

உண்மையான காதல்
'எங்கள் திருமணத்தை அறிவிக்க வேண்டிய நேரம் இது. இந்த வாழ்க்கையை வாழ நான் உற்சாகமாக உணர்கிறேன். உண்மையான காதல் இருக்கிறது என்பதை நிரூபித்ததற்காகவும் என்னை நேசித்ததற்கு நன்றி கிச்சு என்று சோசியல் மீடியாவில் கூறியிருந்த அவர், ரொமான்டிக்கான போட்டோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

அங்கமாலி டைரிஸ்
இதையடுத்து அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். கிச்சு, மலையாளத்தில் ஹிட்டான அங்கமாலி டைரிஸ், தண்ணீர் மதன் தினன்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜாகஜன் தரம் என்ற படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார்.

எப்போது திருமணம்?
இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் தேவாலயம் ஒன்றில் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் ரோஷ்னா. இதையடுத்து வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள், எப்போது திருமணம் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











