மணமேடையில் சசிக்குமாரைப் பார்த்ததும் காலில் விழுந்த அபிநயா.. நாடோடிகள் டீம் போகாம இருப்பாங்களா?

சென்னை: இந்த வாரம் ரொம்பவும் விஷேசமான வாரம் எனக் கூறலாம். சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி வெள்ளித்திரை பிரபலங்கள் வரை திருமணங்கள், நிச்யதார்த்தம் என செம ஜோராக நடைபெற்றுக் கொண்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதே தினத்தில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணம் நடைபெற்றது. இன்று சின்னத்திரை பிரபலங்களான பவானி - அமீர்க்கு திருமணம் நடைபெற்றது.கடந்த வாரத்தின் தொடக்கத்தில் நாடோடிகள் புகழ் நடிகை அபிநயாவுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள்.

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிநயா. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளியான அபிநயா, தமிழ் மற்றும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு என ஒரு கலக்கி கலக்கி வருகிறார். ஊடகங்களுக்கு பேட்டி அளித்தால் கூட சைகை மொழி தெரிந்தவர்கள் உதவியுடன் மிகவும் அழகாக பேட்டி கொடுக்கிறார்.

Actors Sasikumar And Samuthirakani Wishes Nadodigal Actress Abhinaya Wedding

இவர் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தபோது, விஷால் உடன் காதலில் இருக்கிறார். இருவரும் அவுட்டிங் செல்கிறார்கள் என கிசுகிசுக்கள் கோலிவுட்டில் வலம் வந்தது. ஆனால் இந்த கிசுகிசுக்கு பளிச் என பதில் அளித்திருந்தார். அதாவது, " நானும் விஷாலும் நல்ல நண்பர்கள். அவர் என்னிடம் பேச சைகை மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்தார். அவர் படப்பிடிப்பு தளத்தை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்பார். அவர் என்னிடம் இனிமையாக பழகுகிறார். என்னை அவர் ஒரு சகோதரி போலத்தான் நடத்துகிறார்" என பதில் அளித்திருந்தார்.

அபிநயா: இப்படியான நிலையில், அபிநயாவின் தயார் கடந்த ஆண்டு மறைந்ததால், அபிநயாவின் காதலரும் தொழிலதிபருமான கார்த்திக்கிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அவர்கள் பகிர்ந்தார்கள். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. ரசிகர்கள் இணையவாசிகள் என அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Actors Sasikumar And Samuthirakani Wishes Nadodigal Actress Abhinaya Wedding

சசி & கனி: இந்நிலையில் அவர்கள் திருமணத்தில் நாடோடிகள் படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, படத்தில் நடித்த சசிகுமார் ஆகியோர் இவர்களின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் தனது திருமண நிகழ்ச்சியில் பார்த்ததும் அபிநயா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, அவர்கள் இருவரையும் வரவேற்றார். மேலும் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை சசிகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Actors Sasikumar And Samuthirakani Wishes Nadodigal Actress Abhinaya Wedding

மாற்றுத்திறனாளி கணவர்: அபிநயாவின் காதல் கணவர் கார்த்திக்கும் அபிநயாவைப் போலவே வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி. இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசி பழகி உள்ளார்கள். அதன் பின்னர்தான், அவர்கள் பழக்கம் காதலாக மாறி, தற்போது திருமணத்தில் கைகூடியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X