கடைசியாக மனைவியை தொட்டுப்பார்க்க கூட முடியாத துயரம்.. அருண்ராஜாவை பார்த்து கலங்கிய நடிகர்கள்!

சென்னை: கொரோனாவால் மரணமடைந்த இயக்குநர் அருண்ராஜாவின் மனைவியின் உடலுக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கண்ணீர் மல்க நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Recommended Video

Arunraja மனைவிக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்திய SK, Udhayanidhi | #RIPSindhuja

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான கனா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனின் நண்பர்

சிவகார்த்திகேயனின் நண்பர்

நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜ், மான் கராத்தே, ரெமோ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், லாரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

கடைசியாக தர்பார் படத்தில் இடம்பெற்ற கண்ணுல திமிரு என்ற பாடலையும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி என்ற பாடலையும் எழுதியிருந்தார். குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

தற்போது ஆர்ட்டிக்கிள் 15 என்ற படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி இயக்கி வருகிறார் அருண்ராஜா காமராஜ். இந்நிலையில் அவருடைய மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி மரணம்

சிகிச்சை பலனின்றி மரணம்

இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார் சிந்துஜா. இந்நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கவச உடையுடன் பங்கேற்பு

கவச உடையுடன் பங்கேற்பு

அருண்ராஜா காமராஜும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தனது மனைவி மரணமடைந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கில் பிபிஇ கிட் உடையுடன் கலந்து கொண்டார்.

கவச உடையில் இறுதிச்சடங்கு

கவச உடையில் இறுதிச்சடங்கு

மனைவியின் உடலை தொட்டுக்கூட பார்க்க முடியாமல் அவர் கதறியது அங்கு கூடியிருந்த சொந்த பந்தங்களையும் கதற செய்தது. முழு கவச உடையுடனே அருண்ராஜா காமராஜ் தனது மனைவியின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்து முடித்தார்.

நடிகர்கள் அஞ்சலி

நடிகர்கள் அஞ்சலி

சிந்துஜாவின் இறுதிச்சடங்கில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் மற்றும் பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

அருண்ராஜா காமராஜை கவச உடையில் பார்த்த சிவகார்த்திகேயனும் உதயநிதி ஸ்டாலினும் கண்கள் கலங்கினர். உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்திலும் தான் இறுதி அஞ்சலி செலுத்தும் போட்டோவை ஷேர் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈடுசெய்ய முடியாத இழப்பு

ஈடுசெய்ய முடியாத இழப்பு

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது, நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X