இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே!
சென்னை: இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என எஸ்பிபிக்காக நடிகர் சிவகார்த்திகேயன் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு ஒட்டு மொத்த இசை பிரியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவு ஈடு செய்ய முடியாது இழப்பு என வேதனை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் குடியரசுத் தலைவர்
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன்
இதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாலிவுட் நடிகர்கள் அக்ஷய்குமாய், சல்மான் கான், ஷாருக் கான் உள்ளிட்ட பலரும் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனும் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசை இருக்கும் வரை
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்...இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி
மேலும் எஸ்பிபியின் படத்தையும் பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இதேபோல் நடிகர் விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கத்தில் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என்றும் உங்கள் நினைவுகளுடன் என குறிப்பிட்டுள்ளார்.

மனோபாலா
இதேபோல் நடிகர் மனோபாலா பதிவிட்டுள்ள டிவிட்டில், அரசுக்கு ஒரு சின்ன விண்ணப்பம்.. எங்கள் எஸ்பிபி அண்ணாவுக்கு அரசு மரியாதையோடு அவரை அடக்கம் செய்தால் மரியாதை.. 6 தேசிய விருதுகள்...எக்கசக்க விருதுகள்...பரீசிலிக்க வேண்டுகிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











