Garudan: சூரிக்காக கைக்கோர்த்த சிவகார்த்திகேயன் -விஜய் சேதுபதி.. கருடன் பட அதிரடி ட்ரெய்லர் ரிலீஸ்!
சென்னை: நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கருடன் படம் வரும் மே மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ, கிளிம்ப்ஸ் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்ற சூழலில் இன்றைய தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூரி, சசிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் மட்டுமில்லாமல் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் பங்கேற்று மாஸ் காட்டினர். ஸ்டேஜ் ஏறியவுடன் விஜய் சேதுபதி சூரி உள்ளிட்டவர்களை கட்டி தழுவி சிவகார்த்திகேயன் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மேலும் படக்குழுவினருக்கும் தன்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்தார்.

கருடன் படம்: நடிகர் சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன் இணைந்து நடித்துள்ள கருடன் படம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வெற்றிமாறன் கதையில் சூரி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் என வெற்றி படங்களை கொடுத்த துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தனுடன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரகனி, மைம் கோபி , வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் இன்றைய தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மே 31ம் தேதி ரிலீஸ்: படம் வரும் மே மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக் குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, இன்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்ட சூழலில், அது மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. சூரியின் கேரக்டர் இந்த படத்தில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஹீரோவாக தொடரும் சூரி: காமெடியனாக அதிகமான படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் களமிறங்கி ஏராளமான ரசிகர்களை தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடியால் கவர்ந்து வந்தவர் சூரி. அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றிருந்தார். இதையடுத்து அவர் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்ததாக விடுதலை 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனக்கு ஹீரோ வாய்ப்புகள் மட்டுமே வருவதாகவும் காமெடியனாக நடிக்க வாய்ப்புகள் வருவதில்லை என்றும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருடன் பட ட்ரெய்லர் : இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக களைகட்டியது. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்கள் இணைந்திருந்த சூழலில், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஸ்டேஜில் கட்டி தழுவி தங்களது உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் தொடர்ந்து சூரியையும் கட்டி தழுவி தங்களது உற்சாகத்தையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்ததை பார்க்க முடிந்தது. இதனிடையே இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சூரியின் அழுத்தமான நடிப்பு வெளிப்பட்டுள்ளது. அவர் சசிகுமாருக்கு துணையாக இருப்பதாக காட்சிகளில் காணப்படுகிறது. இந்த ட்ரெய்லரும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











