சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா.. ஜூலையில் ரிலீஸ் என அறிவிப்பு!
சென்னை : தென்னிந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்துவரும் நாயகியாக உள்ளார் நடிகை சாய் பல்லவி.
இவரது நடிப்பில் தற்போது கார்கி என்ற படம் உருவாகியுள்ளது. கௌதம் ராமச்சந்திரன் படத்தை இயக்கியுள்ளார்.
ஜூலையில் படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப் படத்தில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்துள்ளனர்.

சிறப்பான நாயகி
தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார்.

கார்கி படம்
தற்போது இவர் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்கி படம் சிறப்பான எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. கௌதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்த மாதத்தில் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு போஸ்டர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு போஸ்டர் வெளியானது. இந்தப் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. மேலும் படத்தின் தலைப்பும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அநீதிக்கு எதிராக குரல்
இந்தப் படத்தில் அநீதிக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இதற்கேற்ப சமீபத்தில் இவர் சில பிரச்சினைகள் குறித்து பேசி, அதிகமான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கார்கி படம்குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கார்கியை வெளியிடும் சூர்யா
அது என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. படத்தை பிளாக்கி ஜெனி மற்றும் மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்சுடன் இணைந்து நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களின் 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ரிலீஸ்
படத்தின் தமிழக திரையரங்க உரிமையயை சக்தி பிலிம்ஸ் பேக்டரி கைப்பற்றியுள்ள நிலையில் படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தற்போது கைப்பற்றியுள்ளது. படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளது.

படக்குழுவினர் மகிழ்ச்சி
இதுகுறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது அறிக்கையில், பல நேரங்களில் வாழ்க்கை அதிசய நிகழ்வுகளை நாம் எதிர்பாராத நிலையில் நடத்தி விடுவதாகவும் அப்படி ஒரு அதிசயமாக சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது படத்தில் இணைந்திருப்பதை பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











