சிறு தயாரிப்பாளர்களைக் காக்கவில்லை.. நடிகர்கள் உதயா, ஆர்.கே.சுரேஷ் ராஜினாமா.. விஷாலுக்கு நெருக்கடி

நடிகர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Recommended Video

விஷால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்- உதயா & ஆர்.கே.சுரேஷ்- வீடியோ

சென்னை: நடிகர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், நடிகர் விஷாலுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் உள்ளார். சிறு தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்வதாகக் கூறியே அவர் அந்த பதவிக்கு வந்தார்.

 Actors Udhaya and R.K.Suresh resigns

ஆனால் சிறுபட தயாரிப்பாளர்களின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பட ரிலீஸில் ஏற்படும் பிரச்சினை தான். பெரிய படங்கள் வரும் போது, சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

இதனால் சிறுபட தயாரிப்பாளர்கள் நஷ்டமடைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய விஷால் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், எதுவும் கைக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், நடிகர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சிறு பட தயாரிப்பாளர்களை பாதுகாக்கவும், அவர்கள் வளர்ச்சிக்காகவும் சங்க தலைவர் விஷால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இருவரும் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயா தயாரித்து நடித்த உத்தரவு மகாராஜா திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படம் ஏற்கனவே ஏராளமான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் காற்றின் மொழி, திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா ஆகிய படங்கள் வெளியாகின.

இதனால் உதயாவின் உத்தரவு மகாராஜா படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதே போல தீபாவளிக்கு ரிலீசான ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி படத்துக்கும் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

இந்த பிரச்சினை காரணமாகவே இருவரும் ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் சங்கத் தலைவராக உள்ள விஷாலுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. விரைவில் அவர் இதுகுறித்து விளக்கம் அளிக்கலாம் என தெரிகிறது.

முன்னதாக, ஒட்டு மொத்த தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுகளும், ஓரிரு நிர்வாகிகளால் தன்னிச்சையாக எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டி செயற்குழு உறுப்பினர் பதவியை தேனப்பன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X