அட பொங்கல் ரேஸ்ல சிரஞ்சீவியும் இருக்காரா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

ஐதராபாத் : தீபாவளியையொட்டி பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்கள் ரிலீசாக உள்ளன. இந்தப் படங்கள் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன.

இதைக்காட்டிலும் வரும் பொங்கல் பண்டிகை ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையவுள்ளது.

காரணம் பொங்கலையொட்டி நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் வெளியாகவுள்ளன.

பண்டிகைகளில் ரிலீசாகும் படங்கள்

பண்டிகைகளில் ரிலீசாகும் படங்கள்


தமிழ் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பண்டிகைகளின்போது திரைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாகவே உள்ளது. பண்டிகைகளின்போது குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்கள், அந்த நாட்களில் திரைப்படங்களை திரையரங்குகளில் சென்று குடும்பத்துடன் என்ஜாய் செய்வதை மிகவும் விரும்புகின்றனர்.

தீபாவளிக் கொண்டாட்டம்

தீபாவளிக் கொண்டாட்டம்

மேலும் பண்டிகை தினங்களின் போது தொடர்ந்து விடுமுறை கிடைப்பதும் அந்த நேரத்தில் திரைப்படங்களை அவர்கள் பார்ப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. அந்த வகையில் இந்த தீபாவளிக்கு மிகுந்த எதிர்பார்ப்பை கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ஒரே நாளில் வெளியாகும் படங்கள்

ஒரே நாளில் வெளியாகும் படங்கள்

பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்கள் தீபாவளியையொட்டி ஒரே நாளில் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளன. இந்தப் படங்களின் பிரமோஷன்கள் மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டு படங்களும் பாடல்கள், டீசர், ட்ரெயிலர் என வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

பொங்கலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

பொங்கலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

ஆனாலும் தீபாவளியைக் காட்டிலும் பொங்கலுக்காகத்தான் இந்த முறை ரசிகர்கள் அதிகமான ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பொங்கலையொட்டி அஜித் மற்றும் விஜய்யின் துணிவு மற்றும் வாரிசு படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளன.

விஜய் -அஜித் படங்கள்

விஜய் -அஜித் படங்கள்

இந்தப் படங்கள் அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களில் எந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று இப்போதே இணையதளங்களில் விவாதங்கள் சூடு பறக்கத் துவங்கியுள்ளன. இதனிடையே, இந்தப் படங்களுடன் பிரபாசின் ஆதிபுருஷ் மற்றும் சிரஞ்சீவியின் மெகா154 படமும் ரிலீசாக உள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகா 154 படம்

மெகா 154 படம்

சிரஞ்சீவி, ரவிதேஜா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் பாபி இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ள படக்குழு, பொங்கல் ரிலீசுக்கான பணிகளையும் மேற்கொள்ளவுள்ளது.

பொங்கல் ரேசில் மெகா 154 படம்

பொங்கல் ரேசில் மெகா 154 படம்

சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகரான பாபி, இந்தப் படத்தில் அவரை மாஸாக வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ள நிலையில் படம் இந்த பொங்கல் ரேஸில் சிறப்பான கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டப்பிங் வேலையை துவங்கிய சிரஞ்சீவி

டப்பிங் வேலையை துவங்கிய சிரஞ்சீவி

இதனிடையே இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் இன்றைய தினம் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. டப்பிங் மற்றும் சூட்டிங்கில் ஒரே நேரத்தில் சிரஞ்சீவி, ரவிதேஜா மற்றும் ஸ்ருதிஹாசன் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X